வருகின்ற புயல் Phoenix, Arizona, USA 60-0229 1ஜெபத்துக்காக சிறிது நேரம் நின்ற வண்ணமாக இருப்போம். நாம் தலைகளை வணங்கலாமா? எங்கள் கிருபையுள்ள பரலோகப் பிதாவே, உமது மகிமையுள்ள முகத்தை நோக்கி, உம்மை எங்கள் பிதாவே என்று கூப்பிட முடிவதற்காக, இன்றிரவு நாங்கள் உண்மையில் சிலாக்கியம் பெற்றவர்களாயிருக்கிறோம். நாங்கள் மரணத்திலிருந்து ஜீவனுள்ள பிரவேசித்திருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். ஏனெனில் பரிசுத்த ஆவி தாமே, நாங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம் என்று எங்களோடு சாட்சி பகருகின்றார். அந்த கோட்டைக் கடந்துவிட்டோம் என்பதற்கு அவரே எங்கள் சாட்சி. நாங்கள் ஒரு காலத்தில் அன்பு கொண்டிருந்த உலகத்தின் காரியங்கள் இப்பொழுது மரித்துவிட்டன. நாங்கள் கிறிஸ்துவோடு புதிதாக எழுப்பப்பட்டு, அவரோடு இப்பொழுது உன்னதங்களில் உட்கார்ந்து, அதற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! இன்றிரவு இத்தருணத்தில் அவர் எங்களை வல்லமையான விதத்தில் சந்திக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். நாங்கள் நேசிக்கும் இச்சிறு சபையை ஆசீர்வதிப்பீராக நாங்கள் இச்சபையின் பேரிலும், அதன் போதகர், அங்கத்தினர் பேரிலும், இக்கூட்டத்தில் எங்களோடு பங்கு கொள்பவர் பேரிலும் மிகுந்த ஐக்கியமும் அன்பும் கொண்டிருக்கிறோம். பரலோகப் பிதாவே, இந்த இரவு ஒரு விசேஷித்த இரவாக அமைந்திருக்கவும், இன்றிரவு இங்குள்ள உமது பிரசன்னத்தை நாங்கள் நீண்ட காலம் நினைவு கூரவும் அருள்செய்ய வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக அறிந்திராதவர் யாராகிலும் இன்றிரவு இங்கிருக்க நேர்ந்தால், கர்த்தாவே, வழிதப்பித் திரிந்து மந்தைக்குத் திரும்பாத ஆட்டை தேடிக் சென்றிருக்கும் அவரை அவர்கள் கண்டு கொள்வார்களாக. கர்த்தாவே, இதை அருளும், இன்றிரவு பாளயத்தில் இரக்கம் இருப்பதாக. அதற்காகவே நாங்கள் கெஞ்சுகிறோம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்) 2அருமையான ஐக்கியங்கொள்ள மறுபடியும் இக்கூடாரம் அல்லது சபைக்கு இன்றிரவு வந்திருப்பது மிகவும் நல்லது. நேற்று மாலை கிடைக்கப்பெற்ற சிறு தங்கக் கட்டிகளை (Golden Nuggets) வைத்துக் கொண்டு இன்றைய நாள் முழுவதையும் கழித்தேன். கூட்டத்தினரின் மத்தியில் வெவ்வேறு நபர்களை நோக்கும்போது, நான் சந்தித்துள்ள முகங்களைக் காண்கிறேன். முன்பு வந்திருந்தபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் சந்தித்து அவர்களுடன் கைகுலுக்க நான் எவ்வளவாக விரும்பினேன். ஆனால், ஓ, தாமதமானபடியால், நாங்கள் வேகமாக செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் நேற்று மாலை இங்கு நடந்த கூட்டத்தில், மற்ற கூட்டங்களுக்கு வந்தவர் அநேகரை இங்கு அடையாளம் கண்டு கொண்டேன். 3நேற்றிரவு நான் வீடு திரும்பினபோது என் மனைவியிடம், “அந்த கோட்டை நாம் கடந்துவிட்ட பிறகு எப்படியிருக்கும் என்று வியக்கிறேன்” என்றேன். அங்கு நின்று கொண்டு, சுற்றிலும் நோக்கி, ''அங்கு சகோதரன் இன்னார் இன்னார் இருக்கிறார். அதோ...'' என்போம். ஓ, அது மிகவும் அருமையான தருணமாயிருக்கும். அந்த நாளை நாம் விரைவில், விரைவில் எதிர் நோக்கியிருக்கிறோம். அது எப்பொழுது வரும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது நிச்சயமாக மகிமையான நேரமாயிருக்கும். யோவான் தேவனுடைய மகத்தான மகிமையை கண்ணாரக் கண்டு, அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட பின்பு, “ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்'' என்று வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் கூறுகிறான். அது அற்புதமாயிருந்ததை அவன் கண்டான். 4சில வாரங்களுக்கு - ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு, நான் ஜமய்காவிலுள்ள கிங்ஸ்டனில் இருந்தேன். தரிசனங்கள் மேடையின் மேலுள்ளபோது மாத்திரமே வருகின்றன என்று அநேகர் நினைத்திருந்தனர், இப்பவும் நினைக்கின்றனர். அது பத்தில் ஒரு பாகம் கூட கிடையாது, அது தொண்ணூற்றில் ஒரு பாகம் கூட இல்லை. அவை எல்லா நேரங்களிலும், எல்லாவிடங்களிலும் தோன்றுகின்றன. ஒரு முறையாகிலும் அது தவறாயிருந்ததில்லை. அங்கிருந்த முழு சுவிசேஷ வர்த்தகக் குழுவை நான் சந்திக்க சென்றிருந்தேன். இரண்டு இரவுகள் கழிந்தன. அப்பொழுது நாங்கள் கூட்டத்திலுள்ள மக்களை அறிந்து கொள்ளவும், அவர்களுடைய ஆவியை உணர்ந்து கொள்ளவும் சுவிசேஷத்தை பிரசங்கித்தோம். நான், “இன்றிரவு நாம் ஜெப அட்டைகளை விநியோகித்து, வியாதியஸ்தர்களுக்கு ஜெபித்தால், அது போதும்” என்றேன். கர்த்தர் எங்களை ஆசீர்வதித்தார். இரண்டாம் இரவு கழிந்தது. 5அதன் பிறகு நாங்கள் பிளமிங்கோ ஓட்டலின் உணவு அறைக்குள் நுழைந்தோம். அதை நாம் 'கோர்ட்' என்று இங்கு அழைக்கிறோம். அந்த ஓட்டலில் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கு எல்லாமே ஐரோப்பிய முறையை அனுசரித்து நடக்கிறது. உங்கள் அறை வாடகையை செலுத்தும்போது, அதன் கூடவே உணவுக்கான பணத்தையும் செலுத்திவிட வேண்டும். அது வாடகையுடன் கூட சேர்க்கப்பட்டுவிடுகிறது. நாங்கள் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தோம். அங்கு முழு சுவிசேஷ வர்த்தகார் பலர் குழுமியிருந்தனர். அப்பொழுது தரிசனங்களைக் குறித்த கேள்வி எழுந்தது. அவர்கள், ''தரிசனங்கள் மிக அற்புதமானவை. அவை எல்லாவிடங்களிலும் தோன்றினால் மிகவும் அற்புதமாயிருக்கும்'' என்றனர். நான், ''ஓ, அவை மிக நிச்சயமாக எல்லாவிடங்களிலும் தோன்றுகின்றன. ஆனால் அவை ஜனங்களை சுகப்படுத்துவதில்லை. நீங்கள் கவனித்திருப்பீர்களானால் நான் ஜனங்களிடம், ''நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு அது உங்களுக்கு உதவி செய்கிறதா?“ என்று கேட்பது வழக்கம் என்றேன். நான், ”எனக்கும் தான் புரியவில்லை'' என்றேன். தரிசனங்கள் சுகமாக்குவதில்லை. கிறிஸ்து அதை ஏற்கனவே செய்து விட்டார். அது உங்கள் விசுவாசத்துக்கு உதவி செய்யவே. அதற்காக தேவன் அதை கூடுதலாகத் தருகிறார். இது தேவன் அனுப்புவதாக வாக்களித்த ஆசீர்வாதம், இது கடைசி நாட்களின் உறுதிப்பாடு. அதை நாம் இந்த வாரத்தின்போது பார்ப்போம். 6நாங்கள் உணவு மேசையின் உட்கார்ந்து கொண்டிருந்த போது நான், “பரிசுத்த ஆவி இப்பொழுது இங்கு பிரசன்னராயிருக்கிறார் என்றேன். சகோ. ஷகரியான் - உங்களில் பலருக்கு அவரைத் தெரியும் - சகோ. டீமாஸ். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவரும், சகோ. ஆர்கன் பிரைட்டும், இன்னும் பலர், சகோ. சாம் மோர், முழு சுவிசேஷ வர்த்தகரின் தலைவர்கள், உப தலைவர்கள் அனைவரும் அங்கிருந்தனர். நான், ''வந்து கொண்டிருக்கும் உணவு பரிமாறுபவன் (waiter) வியாதியாயிருக்கிறான்“ என்றேன். அவன் மேசையருகே வந்து போது, பரிசுத்த ஆவி அவனோடு பேசத் தொடங்கி, ''உனக்கு இருதயக் கோளாறு உள்ளது. உன் மனைவியும் கிறிஸ்தவளே. நீ விசுவாசிக்கிறாய், ஆனால் பயப்படுகிறாய்” என்று கூறி. அவன் யாரென்றும் அவனைக் குறித்த எல்லா விவரங்களையும் உரைத்தார். அதைக் கேட்ட அவன் நடுக்கமுற்று வெண்ணெய் தட்டை என் தட்டில் போடப் பார்த்தான். அவன், “அது முற்றிலும் உண்மை” என்றான். பிறகு நான் அவனிடம் கூறினேன். நான் அல்ல, பரிசுத்த ஆவி அவனிடம், வீட்டிலுள்ள அவனுடைய மனைவிக்கு என்ன கோளாறு என்றும், அன்று காலை அவன் வேலைக்குப் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் ஒன்றாக ஜெபித்த ஜெபத்தைக் குறித்தும், அன்று அவன் என்னைக் காண எண்ணம் கொண்டிருந்ததைக் குறித்தும் கூறினார். ஓ, என்னே, அவன் மயக்கம் போட்டு விழப்பார்த்தான். அவன், ''அது எப்படி என்று எனக்குப் புரியவில்லையே“ என்றான். நான், “எனக்கும்தான் புரியவில்லை” என்றேன். 7எனக்குத் தெரிந்த ஒன்றே ஒன்று, சகோ. ஷகரியான் மன்னிக்கவும், நான் காரோட்டி வந்தபோது, சகோ. ட்யூப் பிளெஸிஸ் அங்கு நின்று கொண்டிருந்தார். நானும் சகோ. மெர்சியரும் இந்த சபையிலுள்ள அருமையான ஆவியைக் குறித்து பேசிக்கொண்டு வந்தோம். இங்கு அருமையான ஐக்கியம் உள்ளது, அது எங்களுக்கு பிரியம். சகோதரனே, அது மிகவும் நல்லது. அதை அப்படியே வைத்திருங்கள். எங்கள் சகோதரனே, போதகரே, அது மிகவும் நல்லது. அது நல்லது. நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். நான்... அவர், “சகோ. பிரன்ஹாமே, உங்களுக்கு நிறைய கடின...'' என்றார். நான், “இல்லை, தேவனுடைய கிருபை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. அநேக முறை நான் அவருடைய இரக்கத்தை முழுவதுமாக தீர்த்துவிட்டிருக்கிறேன். ஆனால் அவருடைய கிருபையை என்னால் தீர்க்க முடியாது. அதைக் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றேன். 8எனவே அன்று காலை நாங்கள் மேசையில் பேசிக் கொண்டிருந்தபோது, படுக்கைகளை விரிப்பதற்கென ஒரு பெண் தன் தோளின் மேல் படுக்கை விரிப்புத் துணிகளை போட்டுக் கொண்டு அறையின் வழியாக நடந்து சென்றாள். நான், “அந்த ஒளி அந்தப் பெண்ணின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவளைக் கூப்பிடுங்கள்” என்றேன். அவளைக் கூப்பிட்டபோது அவள் வந்தாள். அவளுக்கிருந்த கோளாறு என்னவென்று பரிசுத்த ஆவி கூறத் தொடங்கினார். அவள் கிறிஸ்தவள் அல்ல. அவள் முழு சுவிசேஷ விசுவாசி அல்ல என்று கூறலாம். அவள் சிறுமியாயிருந்தபோது, கிறிஸ்தவள் என்று அறிக்கை செய்திருக்கிறாள். அதாவது அவளுக்கு பன்னிரண்டு வயதான போது, அவளுடைய தாய் அவளை சபைக்கு கொண்டு சென்றாள், அவள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டாள். ஆனால் அவள் அதன் பிறகு சபைக்குச் சென்றதே கிடையாது. அவள் கிறிஸ்தவள் அல்ல என்று நான் கூறக் காரணம் அதுவே. சபை உங்களை கிறிஸ்தவர்களாக ஆக்குவது கிடையாது. நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்க சபை உதவி செய்கிறது. நீங்கள் எதற்குள் பிறந்தீர்களோ அதில் நிலைத்திருக்க; நீங்கள் ஒரே விலையேறப்பெற்ற விசுவாசத்தைக் கொண்ட சகோதரர்களுடன் ஐக்கியங் கொள்ளும்போது, நீங்கள் பெற்றுள்ள விசுவாசத்தில் நிலைத்திருக்க அது உதவி செய்கிறது. 9அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தபோது, நான் தரிசனம் கண்டு கொண்டிருந்தேன். சகோ. டீமாஸ் ஷகரியான் என்னைக் கூப்பிட்டு தரிசனத்தைக் கலைத்து, ''என்ன விஷயம்?'' என்று கேட்டார். அவர் அப்படி செய்யாமல் போயிருந்தால் நான், ''கர்த்தர் உரைக்கிறதாவது, எனக்கு நெருங்கிய உறவுள்ள யாரோ ஒருவர் மரிக்கப் போகிறார். ஒரு இளைஞன் வாயிலிருந்து இரத்தம் கக்கப் போகிறான்“ என்றேன். நான், ”பில்லி எங்கே?“ என்றேன். உங்களில் அநேகருக்கு என் மகன் பில்லிபாலைத் தெரியும். அவன் குழந்தையாயிருந்த போது அவன் தாய் மரித்துவிட்டாள். இரவு நேரங்களில் அவனைத் துணியில் சுற்றுவேன். ஏனெனில் நெருப்பு மூட்டுவதற்கு நிலக்கரி வாங்க எங்களிடம் பணம் இல்லை. அவனுடைய பால் புட்டியை என் தோளின் கீழ் இப்படி வைத்து இரவு நேரத்தில் அதை சூடாக வைத்திருப்பேன். அவன் இரவில் எழுந்து தாய்க்காக அழும்போது, அந்த புட்டியை அவன் வாயில் வைப்பேன். என் மனைவி மரணத்தருவாயிலிருந்த போது, “பில்லியை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்றாள். நாங்கள் நண்பர்களாகவே இருந்து வருகிறோம். நான் எங்கு சென்றாலும், பில்லியைக் கூட்டிக் கொண்டு செல்கிறேன். அவன் என் கூடவே இருந்து வருகிறான். 10எனவே பில்லி புகைப்படங்கள் எடுப்பதற்கென, அவர்கள் “நம்பிக்கையின் தோட்டம்” என்றழைக்கும் இடத்திற்குச் செல்லப் புறப்பட்டான். நான் அவனை வேகமாக அழைத்து, “போகாதே, ஏதோ ஒன்று நடக்கவிருக்கிறது'' என்றேன். அநேக சமயங்களில் தரிசனங்கள் நாம் என்னவென்று அறியாத காரியங்களைக் கூறுகின்றன. வேதாகமத்தின் தீர்க்கதரிசிகள், தாங்கள் எதைக் குறித்து எழுதுகின்றனர் என்பதை அறியாமலே அவைகளை எழுதி வைத்தனர். அவர்கள் நிரூபிக்கப்பட்டவர்கள், பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டவர்கள். சகோ. ஷகரியான், “சகோ. பிரன்ஹாமே, என்ன நடக்குமென்று நினைக்கிறீர்?'' என்று கேட்டார். நான், ''எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒருவர், அவருக்குப் பற்கள் இல்லை. அவர் இரண்டு முறை மூச்சுத் திணறி, பிறகு மரிப்பதைக் கண்டேன். மற்றொருவன் வாயிலிருந்து இரத்தம் கக்கினான். அவன் காண்பதற்கு இளைஞனைப் போலிருந்தான். அவன் மரிக்கக்கூடாது. அவன் ஆயத்தமாயிருக்கவில்லை என்றேன். 11அதன் பிறகு நாங்கள் இவை நடக்கின்றதா என்று கவனித்தோம். நான் ஜமய்காவுக்கப் போவதற்கு ஏவப்பட்டேன், போர்ட்டோ ரிக்கோவுக்கு அல்ல. எனவே எங்களுக்கு போர்ட்டோ ரிக்கோவுக்குப் போக நேரம் வந்தபோது; ஜமய்காவில் அந்த இடத்தில் விமானம் நொறுங்கி விழுந்து, அதிலிருந்தவர் அனைவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பு நாடாவை (safety belt) கட்டினவர்களாய், பன்றிகளைப் போல் தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுடைய உடலின் ஒரு பாகம் வெந்து போயிருந்தது. அவர்கள் அதை ஒரு புறம் தள்ளி வைத்திருந்தனர். நாங்கள் ஜமய்காவுக்கு வந்தபோது, நொருங்கின அந்த விமானம் அங்கு கிடந்திருந்தது. எங்களைப் போர்ட்டோ ரிக்கோவுக்கு கொண்டு செல்ல வந்த விமானத்தின பிஸ்டன் (Piston) அதே இடத்தில் பழுதடைந்தது, பில்லி என்னிடம், “அப்பா, நாம் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அங்கு நிச்சயம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா?'' என்று கேட்டான். நான், “இங்குள்ள கிறிஸ்தவ வர்த்தகரின் குழு நான் கட்டாயம் வரவேண்டும் என்று கூறியுள்ளது. அவர்களுடைய ஐக்கியத்துக்காகத் தான் நான் இரண்டு இரவுகள் அங்கு செல்கிறேன்” என்றேன். அவன், “அந்த தரிசனம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?” என்றான். நான், “ஆம்” என்றேன். 12மூன்று நாட்கள் கழித்து போர்ட்டோ ரிக்கோவில் ஒரு பூங்காவில் நான் நின்று கொண்டிருந்தேன். அதைப் போன்ற ஒரு அழகுள்ள இடத்தை நான் கண்டதேயில்லை. என் கனடா தேசத்து நண்பர் சகோ. ஃபிரட் சாத்மன் (இன்றிரவு அவர் இங்கிருக்கக் கூடும்) புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். இந்த பெரிய... நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இந்த பீனிக்ஸ் அழகாயுள்ளது, லாஸ் ஏஞ்சலிஸ் அழகாயுள்ளது, மியாமியும் அழகாயுள்ளது. ஆனால் இது எதுவும் போர்ட்டோ ரிக்கோவின் அழகுக்கு நிகரில்லை. ஓ, அது மிகவும் அழகாயுள்ளது. அப்படிப்பட்ட அழகான இடத்தை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. அந்த பெரிய பவழப் பாறைகள் அரை மைல் தூரம் செல்கின்றன. பிளமிங்கோ பறவைகள் (Flamingos) அந்த உஷ்ணமான (tropical) பூங்காவில் சுற்றிலும் நடந்து வருகின்றன. பரலோகத்துக்கு ஒத்த அப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதேயில்லை. சகோ. சாத்மான் என்னிடம் ''சகோ. பிரன்ஹாமே பரலோகம் இப்படித்தான் காட்சியளிக்க வேண்டும் என்றார். நான், “ஓ, இல்லை, இதை பரலோகத்துக்கு ஒப்பிடவே முடியாது'' என்றேன். அவர், “ஓ, அந்த பெரிய கடல்” என்றார். நான், “பூமி குலுங்குவதால் அலைகள் உண்டாகின்றன. ஆனால் அங்கு அமைதியாயிருக்கும். அவை மிகவும் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும். மேலும் அங்கு பிளமிங்கோ பறவைகள் பூங்காவை சுற்றிலும் நடந்து வராது. நாம் ஐக்கியங்கொள்ளப் போகும் அந்த பூங்காவில் தேவதூதர்கள் சுற்றி நடந்து வருவார்கள்” என்றேன். 13அந்த சமயத்தில் என் மாமியாரும் என் மாமனாரும் என் அருகில் நடந்து வருவதைக் கண்டேன். என் மாமனார் மரித்து எட்டு, பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அதே நிமிடத்தில், அவரை சந்திக்க என் மாமியார் மரித்துக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில் அவர்கள் மரித்து போனார்கள். இரண்டு மணி நேரம் கழித்து நான் மியாமியை அடைந்தபோது, வீட்டில் எப்படியிருக்கிறதென்று அறிந்து கொள்ள நான் தொலைபேசியில் கூப்பிட்டேன். என் மாமியார் (அவர்களுக்குப் பற்கள் கிடையாது) இருமுறை மூச்சுத் திணறி மரித்துப் போனார்கள். அவர்களுடைய மகன், அவன் மரிக்கவில்லை, ஆனால் குடி பழக்கமுள்ளவன், அவனுடைய குடலில் வெடிப்பு ஏற்பட்டு, இரத்தம் கக்கிக் கொண்டிருந்தான். 14அன்றொரு நாள் சகோ. ஷகரியான் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, ''சகோ. பிரன்ஹாமே, என் நெஞ்சில் பதியத்தக்க இப்படிப்பட்ட சம்பவம் இதுவரை நிகழ்ந்ததேயில்லை'' என்றார். பாருங்கள், அவர் அன்று என்னைக் கூப்பிட்டு தரிசனம் கலையும்படி செய்துவிட்டதால், அது யாரென்று அறிந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அவர் வரப்போகும் ஊழியத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்று அப்படி நடந்தது. அவர், “இப்பொழு தான் அந்த ஊழியம் தொடங்குகிறது என்று நினைக்கிறேன்” என்றார். அது அப்படியே ஆகக்கடவது. எல்லோரையும் ஊக்குவிக்கத்தக்கதாக இங்கு பீனிக்ஸில் ஏதாவதென்று நிகழ்வதாக. பரிசுத்த ஆவியானவர் தாமே நமது மத்தியில் வந்து ஏதாவதொன்றை செய்து, அது நாம் மார்க் கவசத்தை தரித்துக் கொண்டு அவருடைய வருகைக்கு நாம் ஆயத்தமடையச் செய்வதாக. கர்த்தர் ஆர்வதிப்பாராக. 15உங்களை இப்பொழுது அதிக நேரம் வைத்திருக்க விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் அருமையான கூட்டத்தார். இரவு முழுவதும் உங்களிடம் பேச வேண்டுமென்பது போல் தோன்றுகிறது. ஆனால் அப்படி செய்யப் போவதில்லை. நேற்றிரவு நான் அவ்வாறு செய்ய முயன்றேன் என்று நீங்கள் எண்ணினீர்கள். இதை சிறிது ஜாடையாக (hint) எடுத்துரைக்கிறேன். அன்றொரு நாள் காலை என் கூடாரத்தில் ஒரு பொருளின் பேரில் 9.30க்கு பேசத் துவங்கி 12.30க்குமுடித்தேன். ஆனால் நான் ஏற்கனவே அவர்களுக்கு அறிவித்துவிட்டேன். கேட்டு, அறிந்துகொண்டு, அதன்படி நடத்தல் என்னும் பொருளின் பேரில் பேசினேன். வேண்டுமானால் ஒரு ஞாயிறு பிற்பகல் அதே பொருளின் பேரில் நாம் பேசுவோம். அதை பேச வேண்டுமென்று ஒரு ஆண்டு காலமாக பரிசுத்த ஆவியானவர் என்னுடன் இடைப்பட்டுக் கொண்டு வந்தார். முடிவில் என் சபையில் அதை பேசினேன். நாங்கள் அங்கிருந்து புறப்படும் முன்பு அதன் எத்தனையோ ஒலி நாடாக்களை பையன்கள் எடுத்துச் சென்றனர். 16இப்பொழுது நாம் வேகமாக நமது வேதாகமங்களை பரி. மத்தேயு 7ம் அதிகாரம் திருப்பி 24ம் வசனம் முதல் வாசிப்போம். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின் மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின் மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து காற்று அடித்து அந்த வீட்டின் மேல் மோதினபோது அதுவிழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். மத். 1:24- 27 17வாசிக்கப்பட்ட அவருடைய வார்த்தையுடன் தேவன் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. நான் வருகின்ற புயல் என்னும் பொருளின் பேரில் சிறிது நேரம் பேச விரும்புகிறேன். நாம் பரிசுத்த ஆவிக்கு நம்மை ஒப்புக்கொடுக்க தேவன் மேல் நம்பிக்கையாயிருக்கிறேன். நான் ஒரு பிரசங்கி அல்ல என்று எவருமே அறிவர். எனக்குப் பின்னால் பிரசங்கிமார்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறனர். ஒரு போதகனாவதற்கு வேண்டிய கல்வியை நான் பெற்றிருக்கவில்லை. ஆனால் என் பழைய, மெள்ள பேசும் முறையின் மூலம்... வேறொன்றைச் செய்ய வேண்டுமென்று தேவன் எனக்குத் தந்திருக்கிறார். ஆனால் நான் நேரத்தை எடுத்தக் கொண்டு, நான் கர்த்ரைக் குறித்தும், அவருடைய அருமையான தன்மையைக் குறித்தும் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க எனக்குப் பிரியம். இன்றிரவு நாம் வருகின்ற புயல் என்பதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். என் இருதயத்திலுள்ளதை சொற்களால் விவரிக்க நான் தவறினால், பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்தித் தர வேண்டுமென்று ஜெபிக்கிறேன். 18இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனையும் ஸ்திரீயையும் தாக்க வேண்டிய புயல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது என்று இயேசு கூறினார். அதிலிருந்து தப்பிக்க வழியேயில்லை. எப்பொழுதாவது உங்களையும் அந்த புயல் தாக்கும். உங்கள் வீடு அதைத் தாங்குமா இல்லையா என்பது நீங்கள் எப்படிப்பட்ட அஸ்திபாரத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. வரப்போகும் புயலுக்கு ஆயத்தப்பட்டதன் விளைவாக எத்தனையோ உயிர்கள் காக்கப்பட்டுள்ளன. புயல் வரப் போகிறது என்னும் எச்சரிப்புக்கு செவி கொடுக்காததன் விளைவாக எத்தனையோ உயிர்கள் நாசமடைந்தும் உள்ளன. 19அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறித்து கேள்விப்பட்டேன். அதை பிளாரிடாவில் ஒரு செய்தித்தாளில் படித்தேன். பிளாரிடாவை பல புயல்கள் தாக்கியுள்ளன. கடல் கொந்தளித்து, அலைகள் எழும்பி, தண்ணீர் நகருக்குள் நுழைந்து எல்லாவற்றையும் அடித்தக் கொண்டு சென்றுள்ளது. வான்நிலை முன்னறிவிப்பாளர்கள் இப்படிப்பட்ட புயல்களை கவனித்துக் கொண்டே வருவார்களாம். எப்படியோ அவர்கள் வான் நிலையிலும் ஆகாய மண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்களை அறிந்து, புயல்களைத் தோன்றச் செய்யும் வான்நிலை எந்தப் பக்கம்உருவாகின்றது என்பதை கண்டு கொள்கின்றனர். அவர்கள் வாழ்க்கை பூராவும் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டு, விஞ்ஞானம் அவர்களுக்கு அளித்துள்ள குறிப்பிட்ட கருவிகளின் மூலம் அவர்கள் அதை முன் கூட்டி அறிவித்து, எந்தப் பக்கம் புயல் வந்து கொண்டிருக்கிறதென்றும், அதன் காற்றின் வேகம் எவ்வளவென்றும், மற்ற புயல்கள் எந்தப் பக்கம் வருகிறதென்றும், அதன் காற்றுகளின் வேகம் எவ்வளவென்றும் இவை அந்த புயலை தடுத்து பின்னால் தள்ளிவிடக் கூடுமா என்னும் விவரங்கள் அனைத்தையும் அளிக்கின்றனர். 20இங்கு நான் நிறுத்திக் கொண்டு, அந்த புயலைத் திசை திருப்ப அதைக் காட்டிலும் வல்லமையான புயல் அவசியம் என்பதைக் குறித்து ஒரு மணிநேரம் பிரசங்கிக்கக் கூடும். இன்று அப்படித்தான் உள்ளது! வரப்போகும் புயல் ஒன்றுண்டு என்று நாமெல்லாரும் அறிவோம். அந்த புயலைத் திசை திருப்பக் கூடிய எனக்குத் தெரிந்த ஒரே காற்று, பெந்தெகொஸ்தே நாளன்று விழுந்த பலத்த இடி முழக்கம் போன்ற காற்று மாத்திரமே. இப்பொழுதும் கம்யூனிஸத்துக்கு விரோதமாக பேசும் மக்கள் நகரில் இருப்பதாக கேள்விப்படுகிறேன். அப்படி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு விரோதமாக பேசினால் மாத்திரம் போதாது, அதை எப்படி திசை திருப்புவது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அந்த புயலைத் தள்ளி அதை திசை திருப்புவதற்கு அதைக் காட்டிலும் வல்லமையான புயல் ஒன்றுண்டு. 21பிளாரிடாவிலுள்ள வான்நிலை முன்னறிவிப்பாளர்கள் பிழையின்றி கிரமமாக முன்னறிவிப்பவர்கள். அந்த நோக்கத்துக்காகவே - ஜனங்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவே - அவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். சில ஆண்டகளுக்கு முன்பு மத்திய பிளாரிடாவைக் கடந்து சென்ற ஒரு புயலைக் குறித்து நான் படித்தேன். அதை எங்கு படித்தேன் என்று மறந்து விட்டது, செய்தித்தாளில் என்று நினைக்கிறேன். ஒக்கி சோபியைச் சுற்றிலுமிருந்த வட்டாரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நான் ஐந்து வாரங்களுக்கு முன்பு அங்கிருந்து வந்தேன். அண்டை வீட்டிலிருந்த ஒருவர் வானொலியில் புயல் அறிவிப்பைக் குறித்து எப்பொழுதும் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பிரபலம் வாய்ந்த கிறிஸ்தவர். மரங்களை விழச் செய்யக் கூடிய ஒரு பெரிய புயல் வந்து கொண்டிருக்கிறது என்று அவர் வானொலியில் கேட்டார். எல்லோரும் பாதுகாப்பான இடத்தை அடைய வேண்டுமென்று எச்சரிக்கப்பட்டனர். கோழிப் பண்ணை வைத்திருக்கும் அண்டை வீட்டிலுள்ள ஒருவர் அவருக்கு ஞாபகம் வந்தது. அவருடைய கட்டிடங்கள் இலேசானவை. அதில் கோழிக்குஞ்சுகளை அவர் வைத்திருந்தார். அடைகாக்கும் வீடுகள், கோழிகளை அடைக்கும் இடங்கள் எல்லாமே அங்கிருந்தன. அவர்களுடைய ஜீவனாம்சமே கோழிகளின் மேல் சார்ந்திருந்ததால், அவர் பதறிப்போய் வேகமாக அந்த வாசல் வரைக்கும் சென்று காரை நிறுத்தி அவரிடம், ''உங்கள் கோழிக்குஞ்சுகளை எல்லாம் புயலுக்கு ஒதுங்குமிடத்தில் (storm shelter) வைத்துவிட்டு, என் வீட்டுக்கு வந்துவிடுங்கள். ஏனெனில் எல்லாவற்றையும் முறுக்கி கீழே தள்ளக் கூடிய புயல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது'' என்றார். 22அந்த மனிதனோ அவருடைய முகத்தை நோக்கி கேலியாக சிரித்து, “மூடத்தனம்! இப்படி அவர்கள் அநேகந்தரம் முன்னறிவித்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை'' என்றார். இந்த கிறிஸ்தவ அண்டை வீட்டுக்காரர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, “ஒருக்கால் அப்படி நடந்தால் என்ன கதி?'' என்றார். நாமும் கூட, “இது நடக்கப் போகிறது, அது நடக்கப் போகிறது என்று மற்றவர் கூறக் கேட்டிருக்கிறேன்'' என்று கூறப்படுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் என்றாகிலும் ஒரு நாளில் அது நிச்சயம் நடந்தே தீரும். எனவே ஒவ்வொரு எச்சரிப்பின் சத்தத்துக்கும் நாம் செவி கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். 23ஆனால் இந்த மனிதன், “இப்படிப்பட்ட மூடத்தனத்திற்கு எனக்கு நேரமில்லை. நான் கோழிக் குஞ்சுகளை வளர்க்கிறேன். இப்படிப்பட்டவைகளுக்கு எனக்கு நேரமில்லை'' என்று கூறிவிட்டார். அந்த அண்டை வீட்டார் கெஞ்சினார்; “ஜான், நீ கோழிக் குஞ்சுகளை வேண்டுமானால் விட்டு விட்டு, நீயும் உன் வீட்டாரும் வேகமாக வந்து விடுங்கள் என்று தேவனின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன். நீ நம்பாவிட்டால், உன் குடும்பத்தாரையாகிலும் அனுப்பி வை. அவரோ, ''ஒரு சில வானொலி எச்சரிப்பின் காரணமாக என் பிள்ளைகள் உணர்ச்சிவசப்பட விடமாட்டேன். நானும் என் பிள்ளைகளும் இப்பொழுது நாங்கள் வாழ்கின்ற விதமாகவே வாழ்வோம் என்று தீர்மானித்து விட்டோம். என் மனைவி நான் சொல்வதை மாத்திரமே கேட்பாள். ஏனெனில் இந்த குடும்பத்துக்கு ஆகாரம் தருபவன் நானே. அவள் நான் சொல்வதற்கு கீழ்ப்படிய வேண்டும். நான் தான் இங்கு அதிகாரி. எனவே மூடத்தனமான ஏதோ ஒன்றைக் குறித்து என் பிள்ளைகள் உணர்ச்சிவசப்பட விடமாட்டேன்“ என்றார். அந்த அண்டை வீட்டார் துரத்தப்பட்டார். அவர் வீடு திரும்பி பாதுகாப்பான இடத்தில் புகுந்து கொண்டார். 24திடீரென்று, என்ன நடக்கிறதென்று அவர்கள் அறிவதற்கு முன்பே, மேகங்கள் அவர் மேல் வந்தன. அப்படித் தான் நியாயத்தீர்ப்பும் விழுகிறது. அது திடீரென்று வரும். அது எப்படி அவ்வளவு வேகமாக வந்ததென்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தேவனை தூஷித்தகொடூர மனிதர்கள் கீழே விழுந்து, ''நீர் எப்படி என்னை இவ்வாறு நடத்தலாம்?'' என்று கூச்சலிடுவதை நான் கண்டிருக்கிறேன். அவர்களுக்கு கீழிருந்த அஸ்திபாரம் ஒரு நொடிப் பொழுதில் அழிந்துவிட்டது. எச்சரிப்பை ஏற்றுக் கொள்வதனால் நன்மை பயக்கும். ஓ, நீங்கள் செய்தியாளனை நோக்கி ஏளனமாக சிரிக்கலாம், அவனைக் கொல்லவும் செய்யலாம். ஆனால் செய்தியை நீங்கள் கொல்ல முடியாது. அது அப்படியே சென்று கொண்டிருக்கும். தேவனுடைய செய்தி நித்தியமானது. அவருடைய வார்த்தைகள் ஒருபோதும் தவறாது. பவுல் ஸ்தேவானை கல்லெறிந்து கொன்ற விஷயத்தில் வெற்றி கண்டான். ஆனால் அவனுடைய வாழ்க்கை பூராவும் அவன் இயேசுவுக்குத் தன்னை ஒப்புவிக்கும் வரைக்கும், “வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்னும் அச்செய்தியை விட்டு அவனால் விலகவே முடியவில்லை. ஏதோ ஒன்று அவனைப் பற்றிக்கொண்டது. அது செய்தியாளன் அல்ல, அவன் பெற்ற செய்தி. 25புயல் நகரைத் தாக்கினபோது. அது கோழிப் பண்ணையையும், பண்ணை சொந்தக்காரரையும் அழித்து போட்டது. அவருடைய உடலைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை. அவருடைய மனைவி முழு மூச்சுடன் போராடினாள். அவர்கள் ஓக்கிக்சோபி ஏரியின் அருகில் வசித்தனர். புயல் ஏரியின் தண்ணீரை ஆழத்திலிருந்து மேலே உயர்த்தினது. அதுதான் ஆபத்தை விளைவிக்கிறது. அவைகளுக்கு ஆழமில்லை. படகுகள் அசைகின்றன. அலைகள் எழும்பி படகுகளை தலைகீழாக கவிழ்த்துவிடுகின்றன. புயல் வரும்போது அது தண்ணீரை அநேக மைல்கள் சுழலும்படி செய்கிறது. தண்ணீர் அலையாக எழும்பினதை தாய் கண்டபோது, அவள் பிள்ளைகளை கட்டிடத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிந்து, வீட்டின் புகைக் கூண்டைப் பிடித்துக்கொண்டு அவர்களை கட்டிடத்தின் உச்சிக்கு ஏற்றினாள். 26அப்பொழுது கட்டுவிரியனைக் காட்டிலும் அதிக விஷமுள்ள பாம்புகள் பாதுகாப்பை தேடி ஊர்ந்து வீட்டின் கூரையை அடைந்தன. அவள் கணவனின் பேச்சைக் கேட்டு எச்சரிப்புக்கு செவி கொடாததன் விளைவாக... அவள் மிதித்தாள், அடித்தாள். ஆனால் அந்த விஷப்பாம்புகள் தன் பிள்ளைகளை கடித்து அவர்கள் கூரையில் உயிரழப்பதை அவள் நின்று காணவேண்டிய நிலைமை ஏற்பட்டது. முடிவில் அவளும் விஷப்பாம்பினால் கடிக்கப்பட்டு உயிரிழந்தாள். இப்படித்தான் . இந்த வரலாறு வெளியிடப்பட்டிருந்தது. புயல் நீங்கின பிறகு, தேடும் குழுக்கள் சடலங்களைச் தேடிச் சென்றபோது, அவள் தன் பிள்ளைகளுடன் இறந்து கிடப்பதை அவர்கள் கண்டனர். 27ஓ, எச்சரிப்பை ஏற்றுக் கொள்வது நன்மை பயக்கும்! முதலாவதாக எச்சரிப்பு அளிக்கப்படுவதற்கு முன்பே, பாதுகாப்பான ஒரு இடம் ஆயத்தம் பண்ணப்பட வேண்டும். இல்லையென்றால் எச்சரிப்பு அனுப்பியும் பயனில்லாமல் போகும். எச்சரிப்பு என்பது ஆபத்துக்கு தப்புவிக்க உங்களை ஆயத்தம் பண்ணும் சத்தமாகும். முதலாவதாக ஆயத்தம் இருக்கவேண்டும். ஆயத்தம் பண்ணப்பட்ட பின்பு, நீங்கள் செவி கொடுப்பீர்களா இல்லையா என்று தீர்மானம் செய்வதற்கு எச்சரிப்பு புறப்பட்டு செல்கிறது. உங்களுக்கு செவிகொடுக்க விருப்பம் இல்லையென்றால், அது உங்களைப் பொறுத்தது. நீங்கள் செவி கொடுத்தால் உங்களுக்கு பாதுகாப்பு உண்டு. 28தேவனும் அதே முறையைக் கையாளுகிறார். நாங்கள் தேவனுடைய முறையை ஆதாரமாகக் கொண்டு பணிபுரிகிறோம். பூர்வ நாட்களில் தேவன், ஜலப்பிரளயத்துக்கு முன்னால் இருந்த உலகத்தில் ஜனங்கள் மிகவும் பொல்லாதவர்களாயும் பாவமுள்ளவர்களாயும் இருந்தபோது, தேவன் அதை காணாதவராக இருந்து, அதே சமயத்தில் நீதியுள்ளவராக இருக்கமுடியாது... தேவன் நீதியுள்ளவர், அவருக்கு பிரமாணங்கள் உண்டு. அந்த பிரமாணங்கள் மீறப்படும் போது... தண்டனை இல்லாத எந்தப் பிரமாணமும் பிரமாணம் ஆகாது. நீங்கள் தேவனுடைய பிரமாணங்களை மீறி அதற்கான கிரயத்தை எங்காவது செலுத்தாமல் இருக்கமுடியாது. நீங்கள் செலுத்தியே தீரவேண்டும். ''உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று வேதம் கூறுகின்றது. பாவம் என்பது என்ன? இங்கு சிறிது நேரம் நிறுத்த விரும்புகிறேன். புகை பிடித்தல் பாவமென்று அநேகர் கருதுகின்றனர். அதுவல்ல பாவம். பொய் சொல்லுதல் பாவமென்று பலர் கருதுகின்றனர். அதுவல்ல பாவம். அப்படியே விபச்சாரம் செய்வதும் பாவம் அல்ல. இவையாவும் அவிசுவாசத்தின் தன்மைகளே. நீ அவிசுவாசியாயிருப்பதால் இவைகளைச் செய்கிறாய். 29நீங்கள் இரண்டில் ஒன்றாக மாத்திரமே இருக்க முடியும். நீங்கள் விசுவாசி அல்லது அவிசுவாசி. நீங்கள் விசுவாசியாயிருந்தால் இவைகளைச் செய்யமாட்டீர்கள். இவைகளைச் செய்வீர்களானால் நீங்கள் எதை உடைவர்களாயிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவைகளை நீங்கள் செய்வீர்களானால், உங்களிடத்தில் தேவனின் அன்பு இல்லை. ''அப்படித் தான் வேதம் கூறுகின்றது. நாம் ஒன்றையும் பெறாமலே அதை பெற்றுக் கொண்டதாக அறிக்கை செய்கிறவர்களாயிருப்போம். பேச்சு அதிகம், ஆனால் அதன்படி வாழ்வது கிடையாது. அப்படித்தான் நாம் அதிகம் பிரசங்கிக்கிறோம், ஆனால் பிரசங்கிப்பதை வாழ்ந்து காட்டுவதில்லை. நாம் மாத்திரம் ஜீவிக்கும் பிரசங்கமாக இருந்தால், நாம் ஒவ்வொருவரும் போதகர்களாக இருப்போம், எனக்கு ஒரு பிரசங்கம் செய்வதைக் காட்டிலும் அதை எனக்கு வாழ்ந்து காட்டுவதே நலம், ''நீங்கள் சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கின்ற நிரூபங்கள்'' என்று வேதம் உரைக்கிறது. எனவே பிரசங்கத்தை வாழ்ந்து காட்டுதலே சிறந்ததாகும். 30நீங்கள் விசுவாசிக்காததே பாவம். இயேசு இவ்வுலகில் மாம்சத்தில் இருந்த நாட்களிலே அவர் பொய் சொல்லாத, திருடாத, விபச்சாரம் செய்யாத நீதிமான்களை, பிரசங்கிமார்களை ஆசாரியர்களைப் பார்த்து, அவர்கள் தேவனுடைய குமாரனை விசுவாசிக்காததன் நிமித்தம், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்” என்று கூறவில்லையா? விசுவாசிக்காதவன் ஏற்கனவே ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுகிறான். 31சில நாட்களுக்கு முன்பு நான் பீடஅழைப்பு விடுத்தபோது, எனக்குப் பிரியமான யோவான் 5:24ஐ, அதாவது “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்னும் வசனத்தை எடுத்துரைத்தேன். விசுவாசிக்கிறவனுக்கு! அப்பொழுது ஒருவர், “அது மிகவும் சுலபம்” என்றார். அவரை விசுவாசிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஏனெனில், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக் கூடாது என்று உரைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பரிசுத்த ஆவியைக் பெறும் போது மாத்திரமே நித்திய ஜீவனுக்கேற்ற விசுவாசத்தை உடையவர்களாயிருந்து, நித்திய ஜீவனைப் பெறுகிறீர்கள். ''என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்“ ஆயத்த மாகுதல்! 32தேவன் உலகிலுள்ள பொல்லாங்கைக் கண்டார். அந்த பொல்லாத விபச்சாரச் சந்ததியைக் கண்டபோது, அவருடைய பரிசுத்தம் அதை சகித்துக் கொள்ள முடியவில்லை. ஓ, பாவம் நிறைந்த இந்த உலகம்! அன்றொரு நாள் நானும் என் மனைவியும் பலசரக்கு கடைக்குச் சென்று கொண்டிருந்தேம். வழியில், எங்கள் நகரில் உள்ள ஒரு இளம் பெண்ணைக் குறித்து பேசிக் கொண்டு சென்றோம். அது பனி பெய்யும் காலம். அவள் கோடை காலத்தில் அவர்கள் அணியும் ஒரு கோட்டையும், குட்டை கால் சட்டையும், ஆபாசமான விதத்தில், பனி பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் அணிந்திருந்தாள். என் மனைவி, “அவள் இந்த குளிர் காலத்தில் இந்த உடையுடன் செளகரியமாக இருக்க முடியாதே” என்றாள். நான், ''அவளுக்கு மூளை கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றேன். அவள், “அவள் மேல்நிலைப் பள்ளிக்குப் போகிறாள் தெரியுமா?” என்றாள். நான், “அவள் மேல்நிலை பள்ளிக்கு ஒருக்கால் செல்லலாம். அதனால் எல்லாம் சரியாயுள்ளது என்று சொல்லிவிட முடியாது. அவளுக்கு புத்தி சுவாதீனம் இருக்க முடியாது'' என்றேன். 33நாம் ஜெர்மனிக்கு சென்றால், சில நாட்களுக்கு முன்பு நான் ஜெர்மனிக்கு சென்றிருந்தேன், அங்கு நடந்த கூட்டத்தில் கர்த்தர் ஒரே இரவில் பத்தாயிரம் ஆத்துமாக்களைத் தந்தார். நான் கூட்டத்திலிருந்து திரும்பி வந்த போது, நான் கண்ட காட்சி என்னைத் திகைக்க வைத்தது. கூட்டம் முடிந்தவுடன் நான் பகல் உணவுக்காக தெருவின் முனையிலிருந்த ஓரிடத்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு கிறிஸ்தவர்கள் அனைவரும் உட்கார்ந்து கொண்டு 'பீர்' (beer) மது அருந்திக் கொண்டிருந்தனர். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து இம்மூன்று நாடுகளில் மாத்திரமே கிறிஸ்துவர்கள் மது அருந்துவதில்லை. அவர்கள் குடித்து வெறிப்பதில்லை. அமெரிக்கர்களாகிய நாம்... நான் 'பீர்' குடிக்கவில்லை. சற்று கழிந்து மேசையில் ஒரு கேள்வி எழுந்தது. நான் ஏன் 'பீர்' குடிக்கவில்லை? அது நல்லதல்ல என்பதற்காகவா? என்று. 34டாக்டர் குக்கன்புல் என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் தான் எனக்கு பொழி பெயர்ப்பாளராக இருந்தார். அவர்கள், “என்னைப் பார்த்து என்ன முணுமுணுக்கிறார்கள்?'' என்றுகேட்டேன். அவர், ''நீர் ஏன் குடிக்கவில்லை என்று வியக்கின்றனர்'' என்றார். ரோமாபுரியில் ரோமக் குடிமகனைப் போல் இரு என்று எழுதப்பட்டுள்ளதென்று நானறிவேன். நான் அவரிடம், “இதை அவர்களிடம் கூறுங்கள்: நான் அவர்களைக் குற்றப்படுத்தவில்லை. ஆனால் நான் நசரேய பிறப்பில் பிறந்தவன். ஆகையால் நான் குடிப்பதில்லை என்று என்றேன். அவர்களை நான் புண்படுத்த விரும்பவில்லை. அவர்கள் அதை புரிந்து கொண்டனர். அவர்கள் குடித்துக் கொண்டேயிருந்தனர். இத்தாலி நாட்டிலும் நாங்கள் அதையே கண்டோம். உலகின் பல்வேறு பாகங்களில், நீங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு செல்லும்போது, அந்தந்த நாட்டின் ஆவியைக் காணலாம். 35பின்லாந்திலுள்ள ஓய்.எம்.சி.ஏ.வுக்கு நான் செல்லக் கூடாதென்று பரிசுத்த ஆவியானவர் என்னை எச்சரிக்கை செய்தது எனக்கு ஞாபகம் வருகிறது. பிறகு, அங்கு மனிதரைக் குளிப்பாட்டும் பெண்கள் உள்ளதாக கேள்விப்பட்டேன். நான் டாக்டர் மானினன் என்பவரோடும் மற்றவர்களோடும் அங்கு நீச்சலுக்கு செல்லவில்லை. இந்த பெண்கள் ஆண்களை தேய்த்து குளிப்பாட்டுவதாக நான் கேள்விப்பட்டேன். நான் “அது சரியல்ல'' என்றேன். அவர், ''சகோ. பிரன்ஹாமே, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நர்ஸ்மார்கள் உள்ளதுபோல் இது. அதற்காக அவர்கள் பயிற்சி பெறுகின்றனர்“ என்றார். நான், “அவர்கள் எவ்வளவுதான் பயிற்சி பெற்றிருந்தாலும் எனக்கு கவலையில்லை. அது அப்படியிருக்க தீர்மானிக்கப்படவில்லை. தேவன் அவர்களை வேறு விதமாக உண்டாக்கி அவர்களை மூடியிருக்கிறார்” என்றேன். அது உண்மை. ஆனால் அவர்கள் அதற்கு கவனம் செலுத்துவதில்லை. 36அவர்கள் பின்லாந்து நாட்டுக்காரர்கள், மிகவும் அருமையானவர்கள். ஆனால் அது அந்த நாட்டின் ஆவி. நீங்கள் எங்கு சென்றாலும், அந்த நாட்டின் ஆவியைக் காணலாம். நீங்கள் அமெரிக்காவுக்கு வந்தால் உங்களுக்கு போதுமென்றாகிவிடும். அது தான் எல்லா நாடுகளைக் காட்டிலும் மிக மோசமானது. என் மனைவி என்னிடம், ''இவர்கள் சபைக்கு செல்கின்றனர். இவர்கள் மனச்சாட்சி ஏன் சுத்தப்படுவதில்லை என்று நான் பலமுறை வியந்ததுண்டு'' என்றாள். நான், “என் அருமை மனைவியே, இதை உன்னிடம் கூற விரும்புகிறேன். இவர்கள் அமெரிக்கர்கள்” என்றேன். அவள், ''நாம் என்ன அமெரிக்கர்கள் இல்லையா?“ என்றாள். நான், “இல்லை. நாம் இங்கு தங்கியிருக்கிறோம். நாம் பரத்திலிருந்து பிறந்தவர்கள். பரிசுத்த ஆவி நம்மேல் வந்திருக்கிறார்” என்றேன். எனவே நாம் இங்கு அந்நியரும் பரதேசிகளுமாயிருக்கிறோம். இது நம்முடைய வீடல்ல. தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். எனவே நீங்கள் பரத்திலிருந்து பிறக்கும் போது, தேவனிடத்திலிருந்து வரும் பரிசுத்த ஆவியை உடையவர்களாயிருக்கிறீர்கள். அது உங்கள் சுபாவத்தை மாற்றுகிறது. உங்கள் சகோதரி, உங்கள் தாய், உங்கள் சிறந்த சிநேகிதி அவ்வாறு உடுத்தியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தேவனுடைய ஆவியினால் பிறந்த கிறிஸ்தவன் பரத்திலிருந்து பிறந்த கிறிஸ்தவனாதலால், அப்படிப்பட்டவர்களுடைய ஆவி வேறொரு ராஜ்யத்தை சேர்ந்தது. ஓ, அதைக் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன் பரிசுத்த ஆவியின் எளிமை; அதைப் பின்பற்றி, அது எப்படி நடந்துகொள்கின்றது என்று கவனித்து, நாமும் அதே விதமாக நடந்துகொள்கிறோம். 37நோவாவின் நாட்களில் அப்படித்தான் இருந்தது. தேவனுடைய பார்வையில் பாவம் பெருகியிருந்தது. முழு உலகத்தையும் அழிக்க அவர் புயலை அனுப்புவதற்கு முன்பு, அதிலிருந்து விலகி நிற்க விரும்பினவர்களுக்கு அவர் வழியை ஆயத்தம் பண்ணவேண்டியிருந்தது. நோவா பேழையின் வாசலில் நின்று கொண்டு நீதியைப் பிரசங்கிப்பதை என்னால் காண முடிகிறது. ஓ, அவனுக்கு செவி கொடுக்காதவர் அநேகர். இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அவர்களுக்கு களியாட்டு தேவையாயுள்ளது, சுவிசேஷம் அல்ல. பாவத்தை ''பாவம்'' என்றழைக்க அஞ்சும் இந்த ஹாலிவுட் சுவிசேஷகர்களுக்கு ஐயோ! பரிசுத்த ஆவியைப் பெற்ற, ரப்பர் கை உறையினால் கைகளை மூடிக்கொள்ளாமல் வெறுங் கைகளினால் சுவிசேஷத்தை- கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், துன்மார்க்கருக்கு நியாயத்தீர்ப்பு, நீதிமான்களுக்கு பரலோகம் என்றும், கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்பதைக் குறித்தும் - அஞ்சாது பிரசங்கிக்கும் பழைமை நாகரீகம் கொண்ட, காடுகளில் பிரசங்கிக்கும் போதகர்கள் நமக்குத் தேவை அவர் எந்த காலத்தில் வருவார்? எனக்குத் தெரியாது. யாருக்குமே தெரியாது. ஆனால் அதைக் குறித்து என் சந்ததியை எச்சரிக்க விரும்புகிறேன். அவர் இப்பொழுது வருவாரானால், அதைக் குறித்து அவர்கள் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். 38அந்த பேழையின் வாசலில் நோவா நின்று கொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது. ஓ! அது வழியல்ல என்று ஒருக்கால் நான் விசுவாசிக்க கூடும். ஆனால் நோவா பாதுகாப்புக்குச் செல்லும் ஒரே வழியான அந்த வாசலில் நின்று கொண்டிருந்தான். அதன் பிறகு மோசே, நிலைக் கால்களில் இரத்தம் தடவப்பட்ட அந்த வாசலில் நின்று கொண்டு நியாயத்தீர்ப்பை பிரசங்கிப்பதை என்னால் காண முடிகிறது, நிலைக் கால்களில் இரத்தத்துடன். இன்றைக்கு இயேசு ஆடுகளுக்கு வாசலாக இருக்கிறார். சுவிசேஷத்தின் போதகர்கள் வாசலருகே நின்று கொண்டு, சபையோர் பாதுகாப்பான இடத்தை அடையும்படி கெஞ்சுகின்றனர். அநேகர் நோவாவைப் பார்த்து கேலி செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் பரியாசக்காரர் என்பதாக வேதம் உரைக்கிறது. அவர்கள் இப்படி ஏதாவதொன்றை கூறுவதை என்னால் கேட்க முடிகிறது; “நோவா, இதைவிட வேறு நல்ல பொழுதுபோக்கு உன்னிடம் இல்லையென்றால், நாங்கள் வீட்டிலேயே இருந்துவிடுவோம்.'' 39இன்றைக்கு உலகத்திற்கு - அதுவும் அமெரிக்காவிற்கு - சுவிசேஷம் தேவையில்லை. அவர்கள் விரும்புவது களியாட்டே. அவர்களை மகிழ்விக்க அவர்களுக்கு ஏதாவதொன்று தேவையுள்ளது - நிறைய புதுமையான இசை அல்லது விருந்துகள், அல்லது கன்று ரோஸ்டு போன்றவை. இவையெல்லாம் நல்லதுதான் - சபைக்குப் புறம்பே. ஆனால் சபையில் நியாயதீர்ப்பானது கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையில் பிரசங்கிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும். நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டில் துவங்குகிறது. விருந்துகள் அல்ல. நியாயத்தீர்ப்பு. லோத்து எச்சரிக்கப்பட்டான். தூதர்கள் -அவர்கள் தூதர்கள் என்று அவன் அறியவில்லை - அங்கு சென்று, “இந்த பாவமுள்ள இடத்தை விட்டு வெளியே வா! நீ தப்பித்துக் கொள்ள தேவன் உனக்கு ஒரு வழியை உண்டாக்கியிருக்கிறார். ”இந்த பாவமுள்ள இடத்தை விட்டு வெளியே வா''! என்று சோதோமுக்கு தங்கள் செய்தியை அளித்தனர். 40''சோதோமின் நாட்களில் நடந்தது போல“ என்று இயேசு கூறினார். அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தனர் என்று பாருங்கள். இயேசு அந்நாளை இந்நாளுடன் ஒப்பிட்டார். பாவமுள்ளது! லோத்து தன் ஜனங்களுக்கு இதை அறிவிக்கப் புறப்பட்டபோது, அவர்கள் அவனைக் கேலி செய்தனர். “நகரத்தின் அக்கிரமக் கிரியைகள் அவனுடைய இருதயத்தை வாதித்தது'' தூதர்களின் செய்தி அவர்களைக் கலக்கவில்லை, அவர்களில் எந்த பாதிப்பையும் உண்டு பண்ணவில்லை. நியாயத்தீர்ப்பு நகரத்தை தாக்கவிருந்தபடியால், அவர்கள் வெளியே செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். தேவன் அந்த நகரத்தின் மேல் அக்கினி புயலைக் கொண்டு வர ஆயத்தமானார். ஆனால் அவர்களோ வெளியே வர மறுத்தனர். அவர்கள் தங்கள் பாவங்களில் திருப்தி கொண்டிருந்தனர். 41ஜனங்கள் இன்று தங்கள் பாவங்களில் சௌகரியமாக வாழ்ந்து வருகின்றனர். ஏனெனில் நமக்கு புது கார் உண்டு, நாம் மூன்று வேளை ஆகாரம் உண்கிறோம். நமக்குப் படுக்க சுத்தமான படுக்கை உள்ளது. அது நல்லது. ஆனால் நாம் செழிக்கும்போது, தேவனை மறந்துவிடுகிறோம் அப்படித்தான் நாம் செய்கிறோம் என்று நினைக்கிறேன். போதகர்களாகிய நாமும், கிறிஸ்தவர்களாகிய நாமும், நமது கட்டிடங்களை கட்டுதல், அல்லது தற்போதுள்ளதைக் காட்டிலும் சிறந்த ஒரு சபையைப் பெறுதல், அதிகமான ஆலய இருக்கைகளை பெறுதல் போன்று திட்டங்களில் சிரத்தை கொண்டுள்ளோம். நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்கு புரியும். ஆனால் நாம் முக்கியமான காரியத்தை விட்டுவிட்டோம்: நியாயத்தீர்ப்பு, நீதி, பரிசுத்த ஆவியின் வல்லமை, உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு போன்றவைகளை. தூதன் செய்தியைப் பிரசங்கிக்க ஒருபோதும் தவறவில்லை. அவர்கள் அவர்களை நிறுத்த முயன்ற போதிலும், செய்தி சென்று கொண்டேயிருந்தது. 42நீங்கள் கவனித்தீர்களா? “சூரியன் பிரகாசிக்கின்றது என்று நான் நம்ப மறுக்கிறேன். சூரியனுடன் நான் எவ்வித தொடர்பும் கொள்ளமாட்டேன்” என்று ஒரு மனிதன் கூறுவது போன்று அது உள்ளது. அவன் கண்களை மூடிக்கொண்டு, வீட்டின் அடிவாரத்துகுச் சென்று, ''சூரியன் பிரகாசிக்கிறது என்று நான் நம்ப மாட்டேன்“ என்று கூறுவது போல். நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, அவனுக்கு ஏதோ முளை கோளாறு ஏற்பாட்டிருக்க வேண்டும்'' என்பீர்கள். நல்லது, இயேசு கிறிஸ்துவைப் புறக்கணிக்கும் எந்த மனிதனும் அதே நிலையில் தான் இருக்கிறான். பரிசுத்த ஆவி சூரிய வெளிச்சத்தைக் காட்டிலும் அதிக உண்மையானது. சூரிய வெளிச்சம் தவறக்கூடும், ஆனால் பரிசுத்த ஆவியோ ஒரு போதும் தவறாது. அது பார்வைக்கு மாத்திரம் வெளிச்சம் தரக் கூடியதல்லாமல், ஆத்துமாவுக்கு வெளிச்சம் தரக்கூடியதாயுள்ளது. அது தேவனிடத்தில் நம்மை வழிநடத்தும் மகிமையின் ஒளியாக அமைந்து, நமக்கு கல்வாரியையும், கர்த்தராகிய இயேசு பட்ட துன்பங்களையும், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பையும், வர விரும்புபவர்கள் தப்பித்துக் கொள்ளக் கூடிய வழியையும் எடுத்துக் காண்பிக்கிறது; நான் ஆவிக்குரிய பிரகாரம் குருடனாயிருந்து மாம்சப் பிகாரமாக பார்வையுள்ளவனாய் மாம்சப் பிரகாரம் குருடனாயிருப்பதையே விரும்புவேன். நான் ஆவிக்குரிய பார்வையைப் பெற்றிருக்க விரும்புகிறேன். 43கவனியுங்கள், அந்த மனிதனிடமுள்ள கோளாறு என்ன? அவனுடைய நண்பர்கள் அவனை அணுகி, ''ஜிம்'' ஜான், அது என்ன பெயராயிருந்தாலும், “நீ செய்வது தவறு. இருளான அந்த அடிவாரத்தை விட்டு வெளியே வா” என்பார்கள். அவன் அங்கு நின்று கொண்டு, “நான் இருக்கும் இடத்தில் திருப்தி கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்” என்பானானால், அவனுக்கு சூரிய வெளிச்சத்தை வரவேற்க பிரியமில்லை என்று அர்த்தம். ஆரோக்கியம் தரும் அதன் கதிர்கள் அவனுக்கு வேண்டாம். அதன் அழகு, அவன் வாழ்க்கையில் அது அளிக்கும் உஷ்ணம், அவனுக்குத் தேவையில்லை. அப்படியானால் அந்த மனிதனிடம் ஏதோ தவறுள்ளது. அது போலவே அந்தகாரமான இவ்வுலகில் தங்கியிருந்து, அவிசுவாசமாகிய பாவத்தில் தன்னை அடைத்துக் கொண்டு, ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்று கிடையாது. பரிசுத்த ஆவி என்பது கிடையாது என்று கூறும் ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் இருக்கின்றனர், ஏனெனில் நீ பிசாசின் இருண்ட குகையிலிருந்து - நரகத்தின், பாவத்தின் பெருமையின் குகையிலிருந்து - வெளிவர மறுக்கிறாய் சுவிசேஷத்தின் ஒளியில் நீ நடந்தால் அது உன்னை உஷ்ணப்படுத்துடும். 44ஓ, வந்து கொண்டிருக்கும் நியாயத்தீர்ப்பை கண்டு, பரிசுத்த ஆவியின் உணர்ச்சியை பெற்றிருப்பது எவ்வளவு வசதியான அனுபவம். அவர்கள் அணுகுண்டுகளைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, உனக்கு கிடைத்துள்ள எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை எண்ணிப்பார் அந்த குண்டு வெடிப்பதற்கு முன்பு நாம் நித்திய ஜீவனைக் கொண்டவர்களாய் நாம் மீண்டும் வாலிபமாகிவிடுவோம். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதுள்ளவர் போல ஆகிவீடுவார்கள். அங்கு மரணமோ துயரமோ இருக்காது. ஓ,எவ்வளவு அற்புதமான காரியம் ஒரு மனிதன் அதில் நடக்க மறுப்பானா என்ன? அவன் அப்படி செய்தால், அவனிடம் ஏதோ தவறுண்டு. அவன் மேல் சூரிய வெளிச்சம் படாமல் போனால், அவன் நாளடைவில் வெளுப்பாகிவிடுகிறான். அவன் வியாதிபடுகிறான். 45இன்றைக்கு உலகிற்கு அதுதான் சம்பவித்துள்ளது அதுதான் இன்றைய பெரும்பாலான சபைகளுக்கு சம்பவித்துள்ளது. நாம் இரத்த சோகை பிடித்தவர்களாகிவிட்டோம். நமக்குள் இரத்தம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். நாம் வெளுப்பாகிவிட்டோம். ஏனெனில் நமது ஆவிக்குரிய ஆரோக்கியம் கறைந்துவிட்டது. அத்துமாக்களை வேட்டையாட - ஜனங்களை எச்சரிக்க; நமது அயல் வீட்டாரை, நமது நண்பர்களை, நமது பால்காரனை, நமது செய்தித்தாளைக் கொண்டு வருபவனை தேவனிடம் கொண்டு வர - நமக்கு முன்பிருந்த உற்சாகம் இப்பொழுது இல்லை. என்னவானாலும், யாராகிலும் ஒருவரை கர்த்தராகிய இயேசுவினிடம் நாம் கொண்டு வருவது வழக்கம். ஆனால் இப்பொழுதோ நாம் வெளுத்துப்போய், ஒளியில் நடக்கத் தவறி, நமக்கு அளிக்கப்பட்டள்ள சிலாக்கியத்தை இழந்துவிட்டோம். நாம் தேவனுடைய ஆரோக்கியத்தில் - தெய்வீக சுகமளித்தலில் - நம்பிக்கை வைக்கத் தவறிவிட்டோம். 46இந்த அற்புதமான குமாரனின் ஒளியில் இராதவர்களின் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகள் பட்சிக்கும் காலம் ஒன்று வரும் என்று எனக்கு வேதாகமத்தில் கூறப்பட்டள்ளது, வியாதிகள் பாதையில் வந்து கொண்டிருக்கின்றன, மருத்துவர்கள் அதை தடுத்து நிறுத்தமுடியாது. அது தேவனுடைய வாதைகள். இன்று நமக்குள்ள மருத்துவர்களை காட்டிலும் அதிக திறன் பெற்றிருந்த எகிப்திய மருத்துவர்களால் தேவனுடைய வாதைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அங்கிருந்த குறி சொல்பவர்களும், போலியாட்களும் அப்படி செய்ய முடியவில்லை. தேவனுடைய ஜனங்களை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் கீழ் ஒன்றாக சேர்த்து வைக்க கோசேனில் தேவனுடைய வல்லமை அவசியமாயிருந்தது! பரிசுத்த ஆவியே இன்று வாசல். பரிசுத்த ஆவியே இன்றைய பாதுகாப்பு. 47அண்மையில் நான் ஒரு கூட்டத்தில் இருந்தேன். இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் கருமை நிற சகோதரனையும் அவருடைய மனைவியையும் நான் பிரசங்கம் செய்யத் தொடங்கின முதற்கு கவனித்துக் கொண்டேயிருக்கிறேன். அவர் தலையையசைத்து களிகூர்ந்துக் கொண்டேயிருக்கிறார். அது ஒரு சம்பவத்தை எனக்கு ஞாபகப்படுத்தினது. ஒரு சமயம் ஒரு பையன் கூட்டத்துக்கு வந்திருந்தான். ஆராதனை முடிந்தவுடன் அவன் என்னிடம் ஓடி வந்து. “போதகரே'' என்றான். அவன் தென்பாகத்தை சேர்ந்தவன். அவன், ”போதகரே இன்றிரவு நான் கர்த்தராகிய இயேசுவைக் கண்டுகொள்ள விரும்புகிறேன்“ என்றான். நான் சுகமளிக்கும் ஆராதனை நடத்திக் கொண்டிருந்தேன். நான், “நிச்சயமாக, என் சகோதரனே, உன்னை அவரிடம் வழி நடத்துவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாயிருக்கும்'' என்றேன். அவன் கர்த்தருக்கு தன் இருதயத்தை ஒப்புக் கொடுத்த பிறகு அவன், ''நான் ஏன் இப்படி ஒடி வந்தேன் என்று நீர் வியக்கிறீர் என்று நினைக்கிறேன். நீர் நகரத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு, உம்மைக் காணவே ஓடி வந்தேன். என் கதையை உம்மிடம் கூறுகிறேன். நான் அலைந்து திரிபவனாயிருந்தேன். வயது சென்ற என் தாய் ஒரு உண்மையான கிறிஸ்தவள். என் சகோதரிகளும் கிறிஸ்தவர்களே. எனக்கு ஒரு கிறிஸ்தவ சகோதரன் இருக்கிறான். நான் தான் வீட்டில் எல்லோரிலும் இளையவன். அவர்கள் எனக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டார்கள். நான் என் தாயின் சொல்லையோ பக்தியுள்ள என் உறவினரின் சொல்லையோ கேளாமல் போனேன். நான் அலைந்து திரிபவனாயிருக்க விரும்பினேன். ஆண்மை கொண்ட மனிதனைப் போல் வாழ விரும்பினேன். கிறிஸ்தவராயிருப்பது பெண்களுக்கும் பலவீனர்களுக்கும் மாத்திரமே என்று நினைத்திருந்தேன். நான் சமையல்காரனாக வேலை செய்தேன். என் வேலையில் நான் மிகவும் திறமைசாலியாயிருந்தேன்“ என்றான். அவன் தொடர்ந்து, ''எனக்கு எப்படியோ வடபாகம் செல்ல வேண்டுமென்று தோன்றினது. நான் மரக் கூழ் (pulp) தயாரிப்பதற்காக மரத்தை வெட்டிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தேன். என்னிடம் பணமே இல்லை. நான் அங்கிருந்த அதிகாரியை சந்தித்து, “உங்களுக்கு சமையல்காரன் அவசியமுண்டா? என்று கேட்டேன்” என்றான். அவன் முன்பு வேலை செய்திருந்த வெவ்வேறு இடங்களில் பெற்ற நற்சாட்சி பத்திரங்களை அவருக்குக் காண்பித்தான். 48அவர், ''எங்களுக்கு சமையல் செய்ய ஒரு கருமை நிற ஸ்திரீ இருக்கிறாள். அவள் நல்ல சமையல்காரி. உனக்கு வேலை கிடைக்கும் வரைக்கும் நாங்கள் சிறிது பண உதவி செய்யலாம். அவளிடம் சென்று பேசிப் பார். ஒருவேளை அவள் உன்னை உபயோகிக்கக் கூடும். அவள் அப்படி செய்தால், உன் சொந்தக் காலில் நிற்கும் வரைக்கும் உன் செலவிற்கு ஒரு சிறு தொகையை நாங்கள் தருவோம்'' என்றார். அவனுக்கு அது நல்லதாய் தோன்றினதாம். அவன் சென்று அந்த ஸ்திரீயைக் கண்டான். அவன் இரண்டு மூன்று நாட்கள் அவளுக்கு சமையலில் உதவி செய்ததாக என்னிடம் கூறினான். 49ஒரு நாள் அவன் படுத்துக் கொண்டிருந்தபோது சுவற்றின் பக்கம் மின்னல் விட்டு விட்டுப் பிரகாசிப்பதைக் கண்டானாம். சற்று பின்பு, யாராகிலும் வெளியில் இருக்கிறார்களா என்று அவன் வியந்தானாம். சிறிது நேரம் கழித்து ஒரு பயங்கரமான இடி இடித்ததாம். அப்பொழுது, “நாம் போய் நமது குதிரைகளை கவனித்துக் கொள்வோம். நாம் இன்னும் அதிக நேரம் இங்கிருக்கமாட்டோம்'' என்று பேசிக் கொள்வதைக் கேட்டானாம். அவன் தலையின் மேல் போர்த்திக் கொண்டிருந்த போர்வையை எடுத்துப் பார்த்து உற்று கேட்டானாம். மின்னல் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் அதிகாரியும் அவன் கூட்டாளியும் நின்று கொண்டிருப்பதை அவன் கண்டான். அவர்களுடைய உரையாடலிலிருந்து ஒரு பெரிய புயல் மலைகளின் வழியாக வந்து கொண்டிருப்பதாக அவன் அறிந்து கொண்டான். வடபாகத்திலுள்ள நாங்கள் அந்த புயலை “வடக்கத் தியான்'' (northener) என்றழைப்பது வழக்கம். அது எச்சரிக்கை எதுவுமின்றி வேகமாக வந்துவிடும். அப்பொழுது எதையும் செய்ய உங்களுக்கு நேரம் இருக்காது. மலைகள் உயரமாயிருக்கும். அது அங்கிருந்து உடனே வந்துவிடும். 50மின்னல் அடித்துக் கொண்டிருந்தது. அந்த அதிகாரி. நாம் அதிக நேரம் இங்கிருக்கக் கூடாது. ஒரு பயங்கர புயல் வரும் போல் தோன்றுகிறது“ என்றான். இந்த பையன் யோசித்துப் பார்க்கத் தொடங்கி இந்தப் புயல் இங்கு தாக்காது என்று நம்புகிறேன். ஏனெனில் நான் செல்வதற்கு இன்னும் ஆயத்தமாகவில்லை என்று மனதில் எண்ணினானாம். சில சமயங்களில் நாம் அதிகமாக காலம் கடத்திவிடுகிறோம். அவன் தொடர்ந்து என்னிடம், ''சில நொடிகளில் காற்று பலமாக அடிக்கத் தொடங்கினது. மரங்கள் அசைந்தன'' என்றான். அவனுக்கும் அந்த ஸ்திரீ உறங்கின இடத்துக்கும் இடையே ஒரு கான்வஸ் (canvas) திரை இருந்தது. அவள் அந்த கான்வஸ் திரையை தட்டி, “மகனே, ஓ, மகனே'' என்று கூப்பிட்டாளாம். அவன், ''என்ன?“ என்று கேட்டான். அவள், ''நான் இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறாயா? நான் விளக்கேற்றி வைத்திருக்கிறேன்'' என்றாளாம். அவன் தொடர்ந்து என்னிடம், ''ஒரு பழைய சோப்பு பெட்டியின் மேல் அவள் விளக்கை வைத்திருந்தாள். அவள், “உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்றாள். நான், “கேளுங்கள்” என்றேன். அவள், “நீ கர்த்தரை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறாயா?” என்று கேட்டாள். அப்பொழுது நான் உண்மையில் பயந்து போனேன். “இல்லை அம்மணி என்று பதிலளித்தேன்” என்றான். அவள், ''நல்லது தேனே, உன்னிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இப்பொழுதே நீ ஆயத்தப்படுவது நல்லது. இல்லையென்றால் அடுத்த சில நிமிடங்களில் நீ ஆயத்தமில்லாதவனாய் அவரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். நீ என்னுடன் முழங்கால் படியிடுவாயா?“என்றாளாம். 51அவன் தொடர்ந்து, “நாங்கள் அந்த பழைய சோப்பு பெட்டியின் பக்கத்தில் முழங்கால் படியிட்டோம். போதகரே, உங்களிடம் நான் உண்மையைக் கூறப் போகிறேன். எனக்கு பயத்தினால் ஜெபிக்கவே முடியவில்லை. மரங்கள் வளைந்து கட்டிடத்தின் மேல் மோதின. மின்னல் அடித்தது, இடி பலமாக இடித்துக் கொண்டிருந்தது. எனக்கு அதிக பயமாயிருந்ததால் ஜெபிக்க முடியவில்லை. நான், ”கர்த்தாவே, என் மேல் இரக்கமாயிரும் என்று கூறுவதற்கு முன்பே டமால் என்று இடி இடிக்கும். ஆண்டவரே, நான் என் ஜெபத்தை எங்கு நிறுத்தினேன்? கர்த்தாவே, “என் மேல் இரக்கமாயிரும்” என்று மறுபடியும் கூறுவதற்கு முன்பே டமால் என்று இடி இடிக்கும் என்றான். அவன் தொடர்ந்து, ஆனால் நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். அந்த வயோதிப பரிசுத்தவாட்டிக்கு பயம் எதுவும் இல்லை. அவள் அமைதியாய் எப்பொழுதும் போலவே சந்தோஷமாயிருந்தாள். அவள் தேவனை குழந்தை காலம் முதற்கு அறிந்திருந்தது போல், அவரிடம் சகஜமாக பேசினாள். அவளுக்கு பயம் எதுவும் ஏற்படவில்லை'' ''ஆனால் எனக்கு மரண பயம் ஏற்பட்டது, முடிவில் இந்த வார்த்தைகளைக் கூறி ஜெபித்தேன்: ஆண்டவரே என்னை நீர் உயிரோடு வைத்தால், அமைதியாயுள்ள இடத்தை நான் அடைந்து, உம்மிடம் வருவேன்“ என்றானாம். அவனுக்கு மற்றொரு தருணம் அளிக்கப்பட்டது. ஒரு கால் அது உங்களுக்கு அளிக்கப்படாமல் இருக்கலாம். தேவனுடைய நியாயத்தீர்ப்பு ஊற்றப்படத் துவங்கும் போது, உங்களுக்கு வேறு தருணம் கிடைக்காது. இப்பொழுது உங்களுக்கு தருணம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவே உங்கள் தருணம். 52புயல் அவனைத் தாக்கினது. அவன், ''போதகரே, என்னைப் போன்ற ஒரு மனிதனுக்கு அந்த பாதுகாப்பான இடத்தை அடைவது சாத்தியமா? மரணம் என்னை சந்திக்கும் நேரத்தில், அந்த வயோதிப பரிசுத்தவாட்டி செய்தது போல, நான் அவருடன் சகஜமாக பேச முடியுமா?'' என்று கேட்டான். நான், “மகனே, அவளை அவ்வாறு செய்த இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உன்னையும் இப்பொழுதே அதே விதமாக செய்யக்கூடும்” என்றேன். நான் காரின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். அவன் நல்ல உடை உடுத்தியிருந்தான். அவன் பண்புள்ளவன், கல்வி கற்றவன். சேறாயிருந்த அந்த இடத்திலேயே அவன் முழங்கால் படியிட்டு,புயலின் போது புகலிடமாயுள்ள அவரை, களைப்பற்ற தேசத்திலுள்ள அந்த கன்மலையை, அந்த ஒதுங்கும் இடத்தைக் கண்டுகொண்டான். நீங்கள் கன்மலையில் ஒளிந்திருக்கும் வரைக்கும் களைப்படைய வேண்டிய அவசியமில்லை. களைப்படைய முடியாத ஒரே இடம் அந்த கன்மலையே. அதுவே திருப்தியளிக்கும் இடம், நீங்கள் மிகவும் பாதுகாப்பாக அங்கு உட்கார்ந்து கொண்டு வெளியே பார்க்கலாம். 53அந்த நேரம் வந்து கொண்டிருக்கிறது. அது இப்பொழுதே இங்கிருக்கிறது (முத்திரை போடப்படுதல் ஏறத்தாழ முடிந்து விட்டது), பூமியின் மேலுள்ள ஒவ்வொரு மனிதனும் ஸ்திரீயும் நோவாவின் நாட்களில் நடந்தது போல், புகலிடத்துக்குள் அல்லது அதற்கு வெளியே இருக்க வேண்டும். நீங்கள் எங்கு இருக்கப் போகிறீர்கள் என்னும் தீர்மானம் செய்யவேண்டும். அந்த பாதுகாப்பான இடம் இயேசு கிறிஸ்துவே. அவர் மாத்திரமே அந்த ஒரு இடம். அவர் ஒருவரே நித்திய ஜீவனை உடையராயிருக்கிறார். அவராலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரமாட்டான். அவரே பாதுகாப்பான பேழை. நாம் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்துவிட்டோம் என்று ஆவியானவர் தாமே நமக்கு இப்பொழுது சாட்சி கொடுக்கிறார். நாம் கல்லறையைப் பார்க்கும் போது, நாம் ஒவ்வொருவரும் அங்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்திருக்கிறோம். 54நாம் செய்தித் தாள்களைப் படித்து, வரவிருக்கும் புயலைக் கண்டு கொள்கிறோம். இன்றிரவு நீங்கள் வீடு திரும்பும் போது எனக்காக ஒன்றைச் செய்யுங்கள். வெளிப்படுத்தல் 8ம் அதி காரத்தைப் படிக்காமல் நீங்கள் படுக்கைக்குச் செல்ல வேண்டாம். வரப்போகும் வாதைகளையும் புயலையும் நீங்கள் அதில் காணலாம். அவை பூமியைத் தாக்கும். இடிகளும் மின்னல்களும் வானத்தை அசைக்கும். துன்பம் ஒவ்வொரு தேசத்தையும் கடந்து செல்லும். மனிதரின் பிணங்கள் அழுகிக் கொண்டிருக்கும். வியாதிகள் அவர்களைத் தாக்கும். மருத்துவர்களுக்கு அது என்ன வியாதி என்று தெரியாமலிருக்கும். ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், அது நடப்பதற்கு முன்பு, முத்திரைகள் போடப்படும். மரண தூதர்களுக்கும் வாதைகளுக்கும், “நெற்றியில் முத்திரை தரித்தவர்கள் எவரருகிலும் செல்லாதீர்கள்” என்னும் கட்டளை தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது. தேவனுடைய முத்திரை பரிசுத்த ஆவியின் அபிஷேகமே. ''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரை தரித்தவர்கள் எவரருகிலும் செல்லாதீர்கள்“ என்னும் கட்டளை தேவனால் கொடுக்கப்பட்டுள்ளது. தேவனுடைய முத்திரை பரிசுத்த ஆவியின் அபிஷேகமே. ''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்'' என்று எபே. 4:30 உரைக்கிறது. எவ்வளவு வேகமாக பேழை அசைந்தாலும், எத்தனை முறை மின்னல் அதை தாக்கினாலும், ''உன் பக்கத்திலும் ஆயிரம் பேரும், உன் வலது புறத்தில் பதினாயிரம் பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது”. பரிசுத்த ஆவி! 55மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஏறியிருந்தவன் புறப்பட்டுச் செல்வதைக் குறித்து நான் வாசிக்கிறேன். அவனுக்கு மரணம் என்று பெயர். பாதாளம் அவன் பின் சென்றது. கறுப்புக் குதிரையின் மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். “ஒரு பணத்தக்கு ஒரு படி கோதுமை, ஒரு பணத்துக்கு மூன்று படி வாற் கோதுமை. எண்ணெயையும் திராட்ச ரசத்தையும் சேதப்படுத்தாதே”. வரப்போகும் நியாயத் தீர்ப்புகளைக் குறித்து நான் வேதத்தின் வாயிலாக அறிகிறேன். அப்பொழுது வியாதி தொல்லை, துன்பம் தேசங்களைத் தாக்கும். ஒவ்வொரு தேசமும் சுக்குநூறாக உடையும். நான் வேதத்தில் படிக்கிறேன்... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) 56எங்கும் அமைதி நிலவினது. கர்த்தராகிய இயேசு அவனுடைய கண்களிலிருந்து இருளை உரித்து பார்வையைக் கொடுத்தார். அவன் நகராண்மைக் கழகத் தலைவரின் கையைப் பிடித்துக்கொண்டு, “நான் காண்கிறேன்! நான் காண்கிறேன்!'' என்று உரக்கச் சத்தமிட்டான். அங்கு முகமதியர் போன்ற வெவ்வேறு மதத்தினர் ஆயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர். நான், ''பாதுகாப்பான பேழை எது? அன்றொரு நாள் உங்கள் செய்தித்தாளில் கல் மதில் சுவர்களின் துவாரங்களிலும் பெரிய கட்டிடங்களின் கோபுரங்களிலும் வசிக்கும் சிறு பறவைகளைக் குறித்து படித்தேன்“ என்றேன். 57இந்தியா ஏழ்மையான தேசமென்று உங்களுக்கு தெரியும். அவர்கள் வயலிலுள்ள கற்களைப் பொறுக்கி மதில் சுவர்களைக் கட்டுகின்றனர். சிறு பறவைகள் தங்கள் கூடுகளை இந்த மதில்களிலுள்ள துவாரங்களில் கட்டி , மழைக்கு ஒதுங்குகின்றன. பகலில் சூரியன் மேற்கு திசைக்குச் செல்லும்போது ஆடு மாடுகள் இந்த மதில்களின் நிழலிலும், பெரிய கோபுரங்களின் நிழலிலும் ஒதுங்குகின்றன. ஆனால் இரண்டு நாட்களாக மிகவும் விசித்திரமாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சிறு பறவைகள் தங்கள் குஞ்சுகளையும் கூட்டிக் கொண்டு மதில் சுவர்களை விட்டுப் பறந்து சென்று இரவில் திரும்பி வரவேயில்லை. அவை வயலின் நடுவில் சென்று அங்கு தங்கிவிட்டன. ஆடு மாடுகள் பகல் வேளையில் சுவற்றினருகே வரவில்லை. அவை சுவற்றை விட்டு வெகுதூரம் சென்று, ஒருமித்து நெருங்கி நின்று, ஒன்றுக் கொன்று நிழலைத் தந்தன. 58சகோதரனே, சகோதரியே, சபையும் அதை தான் செய்ய வேண்டும்! நமக்கு இன்று உயர்ந்த கோபுரமுள்ள இந்த நவீன பாபிலோன்களின் நிழல் தேவையில்லை. நமக்கு ஒருவரின் ஆசிர்வாதம் மற்றவர்க்கு தேவை. நாம் ஒருமித்து நின்று நமது சாட்சிகளையும், பரிசுத்த ஆவியினால் நமது இருதயங்களில் ஊற்றப்பட்டுள்ள கிறிஸ்துவ அன்பையும் சகோதரத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம். அது நமக்கு நிழலை உண்டாக்குகிறது. நான் என் சகோதரனின் கரத்தைப் பிடித்து, சகோதரியின் கரத்தை பிடித்து, நாம் தேவனுடைய ராஜ்யத்தின் குடிமக்கள் என்றும், நாம் ஒருவரிலொருவர் அன்பு கூருகிறோம் என்றும், இந்த ஒரு பெரிய நோக்கத்துக்காக - கிறிஸ்துவின் நோக்கத்துக்காக - நாம் ஒருமித்து நிற்கிறோம் என்றும் அறிந்திருப்பதே நமது நிழலாயுள்ளது. நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், ஒருத்துவக்காரர், இருத்துவக்காரர், திரித்துவக்காரர் யாராயிருப்பினும், இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய பாவங்கள் நம்மை சுத்திகரித்து, நாம் ஒருவரோடொருவர் ஐக்கியங் கொண்டிருப்போமானால், அதுவே நமக்குத் தேவை - சகோ தரத்துவம், ஐக்கியம். 59ஆடுமாடுகள் வயல்களின் நடுவில் நின்று கொண்டிருந்தன. அவை சுவர்களின் நிழலில் வர மறுத்தன. அது விசித்திரமான காட்சியாக ஜனங்களுக்குத் தோன்றினது. என்ன நடந்தது? திடீரென்று பூமியதிர்ச்சி உண்டாகி, மதில் சுவர்களை குலுக்கி தரையில் தள்ளினது. சிறு பறவைகள் அதன் துவாரங்களில் இருந்திருந்தால், ஓக்கிச்சோபியிலிருந்த அந்த ஸ்திரீக்கும் அவள் கணவன், பிள்ளைகளுக்கும் நேர்ந்த கதியே இவைகளுக்கும் குஞ்சுகளுக்கும் நேர்ந்திருக்கும். மதில் சுவர்கள் விழுந்து அவை நசுங்கி செத்திருக்கும். ஆடு மாடுகள் அதன் நிழலில் தங்கியிருந்தால், அவைகளும் நசுங்கி செத்திருக்கும். அது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதைக் குறித்து செய்தித்தாளில் வெளியான செய்தியை நான் வைத்திருக்கிறேன். இல்லை, கிறிஸ்தவ மனிதர்களின் சத்தம் என்னும் பத்திரிக்கையில் அதை வெளியிட டாமி நிக்கல் அதை தம் வசம் வைத்திருக்கிறார். செய்தியின் தலைப்பு, “பறவைகள் தங்கள் இடங்களுக்கு திரும்புகின்றன. ஆடுமாடுகள் வயல் வெளிகளிலிருந்து திரும்புகின்றன” என்றிருந்தது. 60மோசேயின் நாட்களில்... நோவாவின் நாட்களில் தேவன் ஆடு மாடுகளுக்கும் பறவைகளுக்கும், புயல் வரப்போகிறது, அழிவு வரப்போகிறது, ஆகையால் பாதுகாப்பு அடைய பேழைக்குள் செல்ல வேண்டுமென்று எச்சரிக்கை விடுத்திருப்பாரானால்; அவர் இன்றிரவும் அதே தேவனாக இருக்கிறார். அவர் இப்பொழுதும் ஆடு மாடுகளையும் பறவைகளையும் நேசிக்கிறார். நியாயத்தீர்ப்பின் கோபாக்கினையினின்று தப்பித்துக்கொள்ள அவர் பறவைக்கும் பசுவுக்கும் ஒரு வழியை உண்டுபண்ணும்போது, அவருடைய சிருஷ்டிப்பின் புத்திரராகிய உனக்கும் எனக்கும், தப்பித்துக்கொள்ள இன்னும் எவ்வளவு அதிகமாக வழியை உண்டுபண்ணியிருக்கிறார்! பரிசுத்த ஆவியானவர் நமது இருதயத்தை அசைக்கிறதை நாம் உணருகிறோம். அந்த நேரம் வருகிறது. அணுசக்தி காலத்தின் நிழல்களை நாம் காண்கிறோம். ஹைட்ரோஜன் காலத்தின் நிழல்களை நாம் காண்கிறோம். தேசங்கள் உடைகிறதையும் இஸ்ரவேல் விழித்தெழும்புவதையும் நாம் காண்கிறோம். நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்துக் கொண்டது இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம் புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, திகில் எங்கும் சூழ்ந்துள்ளது சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள். அப்படித்தான் இன்றுள்ளது. ஹேவுட்டின் அந்த பழைய பாடல் உங்கள் எல்லோருக்கும் தெரியும். மீட்பின் நாள் நெருங்குகிறது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்கின்றன. ஆவியினால் நிறைந்து உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி மேலே நோக்குங்கள்! உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. 61புயல் வந்து கொண்டிருக்கிறது. மறைந்து கொள்ள ஒரு இடம் உண்டு. ஓ, ஆசீர்வாதமான மறைந்து கொள்ளும் இடம்! அது கிறிஸ்துவில். சற்று நேரம் நாம் தலை வணங்குவோம். அடுத்த சில நிமிடங்களுக்கு நீங்கள் உத்தமமாயும் பயபக்தியோடும் ஆலோசனை செய்ய விரும்புகிறேன். கோபாக்கினையினின்று தப்பித்தக் கொள்ள அந்த ஆசீர்வாதமான மறைந்து கொள்ளும் இடத்தை நீங்கள் கண்டு கொண்டீர்களா? இரண்டு மறைந்து கொள்ளும் இடங்கள் இல்லையென்பதை ஞாபகம் கொள்ளுங்கள், ஒன்று மாத்திரமே உண்டு. நீங்கள் ஏதாவது ஒரு சபையில் நல்லஅங்கத்தினராக இருக்கலாம். அதற்கு விரோதமாக கூற எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதை மாத்திரமே நீங்கள் பெற்றிருந்து, உங்கள் வாழ்க்கை அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்துக்கு ஒத்ததாயிராமல், நீங்கள் பெற்றுள்ளதாக கூறும் அந்த பரிசுத்த ஆவி அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தின் காலத்தில் வாழ்ந்தவர்களைப் போல் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து, உங்கள் வாழ்க்கை அது போன்ற வேறொரு புத்தகத்தை எழுத முடியாமல் போனால், நீங்கள் எச்சரிப்பை ஏற்றுக் கொள்வது நலம். முதலாம் திராட்சை செடி பெந்தெகொஸ்தே சபையை தோன்றச் செய்திருந்தால், அந்த செடியிலிருந்து உண்டான கொடி, பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்ற வேறொரு பெந்தெகொஸ்தே சபையை, முதலாம் சபை கொடுத்த அதே கனிகளுடன் தோன்றச் செய்ய வேண்டும். நீங்கள் ஆசீர்வாதமான தூய தேவனுடைய பிரசன்னத்தில் தங்கியிருக்கிறீர்களா? நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்து விட்டீர்களா? நீங்கள் ஏதோ ஒருவிதமான உணர்ச்சி, மனோதத்துவ விளைவு அல்லது நுண்ணறிவு கொண்ட சொற்பொழிவின் மேல் சார்ந்திருக்கிறீர்களா? அல்லது அவருடைய பிரசன்னத்தில் எப்பொழுதும் தங்கியிருந்து ஆவியின் கனிகளாகிய நீடிய பொறுமை, தயவு, சாந்தம், நற்குணம் ஆகியவைகளை உங்கள் வாழ்க்கையில் பெற்றிருக்கிறீர்களா? உங்களைக் குறித்து தீமையானவைகளை பேசுபவர்களை பொறுத்துக் கொண்டு, அவர்களை அதிகமாக நேசித்து, அவர்களுக்காக உங்கள் இருதயத்தில் ஜெபம் செய்ய உங்களால் முடிகிறதா? அல்லது, ஓ, கர்த்தாவே, நான் அவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமென்று அறிந்திருக்கிறேன். ஆனால்...'' என்னும் சிறு சுயநல ஜெபத்தை ஏறெடுக்கிறீர்களா? ஒ, இல்லை சகோதரனே. தேவனுடைய இனிமையான அன்பு “ஓ, என் ஆத்துமாவில் பாய்வதாக! ஓ பரிசுத்த ஆவியே, என் ஆத்துமாவில் பாய்வதாக! ஓ, பரிசுத்த ஆவியே, என் ஆத்துமாவில் பாயும்'' என்று கூறுங்கள். என் சகோதரனே, பாதுகாப்பான அந்த இடத்தை நீ கண்டு கொள்ளவில்லை என்றால் 62என்றாவது ஒரு நாள், நான் பீனிக்ஸ்க்கு வருவது கடைசி முறையாக இருக்கும். ஒருக்கால் இதுவே கடைசி முறையாக இருக்கக் கூடும். ஒருக்கால் சுவிசேஷம் பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கிக்கப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்கக் கூடும், எனக்குத் தெரியாது. நாம் முடிவு காலத்தை பயங்கரமாக நெருங்கியிருப்பது போல் தோன்றுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த தேசத்துக்கு திரும்ப வந்துவிட்டனர். அதுவே அளிக்கப்பட்ட கடைசி அடையாளம். நான் அன்றொரு இரவு ஒரு படக்காட்சியைக் கண்டேன். அவர்கள் வயோதிபரையும் ஊனமுற்றவர்களையும் கப்பலில் ஏற்றி, தங்கள் சொந்த நாட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். ஒருவர், ''நீங்கள் மரிப்பதற்காகவா சொந்த நாடு செல்கிறீர்கள்?'' என்று கேட்டதற்கு. அவர்கள், “இல்லை, மேசியாவைக் காண நாங்கள் நாடு திரும்புகிறோம்'' என்றனர். கவலைப்படாதீர்கள், அத்திமரம் துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. அதுவே கடைசி அடையாளம். உலகிலேயே மிகப் பழைமையான கொடி எருசலேமில் பறந்து கொண்டிருக்கிறது. அது ஒரு தேசமாகி, தன் சொந்த இராணுவத்தைக் கொண்டுள்ளது. அது சிறிது காலமாக குருடாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பொழுதோ அவர்கள் மறுபடியும் ஒன்று சேருகிறார்கள். தேவன் அதை வாக்களித்தார். அப்பொழுது புறஜாதியாரின் காலம் முடிவு பெறும். அவர்கள் மேசியாவை எதிர் நோக்கியிருக்கின்றனர். உங்களுக்குத் தெரியுமா, தேவன் ஒருமுறை, ''நான் இஸ்ரவேலை மறப்பதில்லை'' என்றார். அவர், “வானங்களின் உயரம் என்ன? பூமியின் ஆழம் என்ன? உன்னால் அளக்க முடியுமா?'' என்றார். தீர்க்கதரிசி, “என்னால் முடியாது” என்றான். அவர், ''நானும் இஸ்ரவேலை மறக்க முடியாது. அது என் கண்ணின் கருமணி'' என்றார். இதுவே கடைசி அடையாளம். இயேசு, ''அத்திமரம் துளிர்விடும் போது, காலம் சமீபமாயிற்று என்றும், அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்றும் அறியுங்கள்“ என்றார். இஸ்ரவேல் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. நான்கு வாரங்களுக்கு முன்பு, அது சொந்த நாணயத்தை ஏற்படுத்திக் கொண்டது. அது முழு நாடாக ஆகிவிட்டது. நாம் எதற்காக காத்திருக்கிறோம்? புறஜாதியாரின் காலம் முடிவடைவதற்கு. 63புறஜாதிகளுக்கு கடைசி அடையாளமாக அளிக்கப்பட்டுள்ளதாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கும் அந்த அடையாளம், சோதோமின் நாட்களில் காண்பிக்கப்பட்டது போல், இந்நாட்டிலும் உலகம் பூராவும் காண்பிக்கப்பட்டு விட்டது. அவர், ''உன் மனைவி சாராள் எங்கே?“ என்று கேட்டார். ஒரு அந்நியர். அவளுடைய பெயர் சாராள் என்றும் அவள் ஆபிரகாமின் மனைவி என்றும் அவருக்கு எப்படித் தெரியும்? ஆபிரகாம், “அவள் உமக்கு பின்புறத்திலுள்ள கூடாரத்தில் இருக்கிறாள்'' என்றான். கூடாரத்திலிருந்த சாராள் தன் உள்ளத்தில் நகைத்தாள். அந்த மனிதர், ''சாராள் ஏன் நகைத்தாள்?'' என்று கேட்டார். இயேசு, “இது நிறைவேறும் போது, காலம் சமீபமாயிற்று'' என்றார். அது செய்யப்படுவதை நீங்கள் கண்டீர்கள். அது நிகழ்ந்துவிட்டது. அடுத்தபடியாக நியாயத்தீர்ப்பு. 64நண்பனே, நீ ஆசீர்வாதமான அந்த மறைந்து கொள்ளும் இடத்தில் இருக்கிறாயா? தேவன் இரக்கமாயிருப்பாராக. நீ அங்கு இல்லாமல், இன்றிரவு ஜெபத்தில் நினைவு கூரப்பட விரும்பினால், உன் கையை உயர்த்தி, “சகோ. பிரன்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள்'' என்று கூறுவாயா? கட்டிடத்தில் எங்கிருந்தாலும், கையையுயர்த்து... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னை, உன்னை, உன்னை. அது நல்லது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராகிலும், ”சகோ. பிரன்ஹாமே என்னை நினைவுகூரும் என்று கூற விரும்புகிறீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, பின்னால் உள்ள உன்னை தேவன் அசீர்வதிப்பாராக, மிகவும் பின்னால் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக, இளம் பெண்னே, இங்குள்ள ஸ்திரீயே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உன்னையும் கூட. ஓ, அது மிகவும் நல்லது. வேறு யாராகிலும் இருந்தால் கையையுயர்த்துங்கள். நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, இதன் அர்த்தம் என்ன?” என்று கேட்கலாம். 65தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே, ஐயா, பின்னால் உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக இங்குள்ள பெண்னே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது அற்புதமானது. “சகோ. பிரன்ஹாமே, என் கைகளை உயர்த்துவதன் அர்த்தம் என்ன?'' உங்களுக்குத் தெரியுமா, விஞ்ஞானத்தின்படி உங்கள் கரங்களை நீங்கள் உயர்த்த முடியாதென்று? உங்களுக்குள் உயிர் இல்லை என்றால், நீங்கள் அப்படிசெய்யமுடியாது. உயிர் என்னவென்று விஞ்ஞானத்துக்கு தெரியாது. அது உயிர் என்று அவர்களுக்குத் தெரியும், ஆனால் அது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களால் உயிரை உண்டாகக் முடியாது. அது என்ன? புவிஈர்ப்பு சக்தி உங்கள் கைகளை கீழே தொங்க வைத்துள்ளது என்று விஞ்ஞானம் கூறுகிறது. அவ்வாறே உங்கள் பாதங்களும் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் உங்களுக்குள் ஒரு ஆவி உள்ளது. ஏதோ ஒன்று உங்கள் அருகில் உள்ளது. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்கு கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும் (யோவான் 6:44, 37). தேவன் உங்கள் இருதயத்தோடு ஈடுபட்டு, ”ஒரு சிறு சத்தம், பாதுகாப்பான இடத்துக்கு வா“ என்று கூறுவதனால் இன்றிரவு நீங்கள் மகிழ்ச்சி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது கவனியுங்கள்: ''என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை”. 66என்ன நடக்க வேண்டும்? ஏதாவதொன்று உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ''நீங்கள் தவறு என்று கூறவேண்டும், ஓ, நீங்கள் ஒரு சபையைச் சேர்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் தவறு. நீங்கள் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. நீங்கள் இன்னும் பேழைக்குள் இல்லை. நாம் எப்படி பேழைக்குள் நுழைவது?அதற்குள்ளே நடந்து செல்வதல்ல. அதற்குள் நாம் எப்படி நுழைவது? ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப் படுவதன்மூலம் விசுவாசிகள் அனைவரும் அந்த ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளனர். எப்படி? பரிசுத்த ஆவியினால். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். பார்த்தீர்களா, அந்த சரீரத்தில், பாதுகாப்பாக. நீங்கள் அதற்குள் இல்லை என்றால், இன்றிரவு சாத்தான் உங்களை போதிய அளவுக்கு நிந்தித்து, உங்கள் கரங்களை உயர்த்தாதிருக்கும்படி செய்ய அவனை அனுமதிக்காதீர்கள். உங்கள் கரங்களை நீங்கள் உயர்த்தினபோது, அது எல்லா விஞ்ஞான விதிகளையும் முறித்து போட்டது. உங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று தீர்மானம் செய்து, விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரிதான ஒன்று விஞ்ஞான விதிகளை எதிர்த்தது. ''எனக்குள் ஒரு ஆவி இருந்து கொண்டு 'நான் தவறு' என்றுரைத்தது. என் அருகில் ஒருவர் உட்கார்ந்து கொண்டு, 'என்னை ஏற்றுக்கொள்' என்றார். சத்தம் எங்கிருந்து வந்ததோ, அந்த பரலோகத்தை நோக்கி என் கையையுயர்த்தினேன்“. ஓ தேவனே, என் மேல் இரக்கமாயிரும். எனக்கு நீர் தேவை. எனக்கு பரிசுத்த ஆவி தேவை. நான் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறேன். என் பாவங்கள் இரத்தத்தின் கீழ் இருக்க விரும்புகிறேன். செய்தித்தாள்கள் என்ன கூறினாலும், நான் வேதாகமம் என்னும் பெரிய செய்தித்தாளைக் குறித்து கேள்விப் பட்டு, அதன் மூலம் பாதுகாப்பை அடைந்துவிட்டேன். என்ன நடந்தாலும், நான் பாதுகாப்பாக இருக்கிறேன். மரணம் என்னைக் கொண்டு செல்ல நேர்ந்தால், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை தேவன், அவர் வரும்போது, அவரோடு கொண்டு வருவார். நான் அப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பேன், மரணம் என்னைத் தொல்லைப்படுத்த முடியாது.'' 67ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. நான் ஜெபிப்பதற்கு முன்பு, இன்னும் வேறு யாராகிலும், “சகோ. பிரன்ஹாமே, அந்த பாதுகாப்பான தங்கும் இடம் எனக்கு வேண்டும் என்று கூற விரும்புகிறீர்களா? கரத்தை உயர்த்தாத வேறு யாராகிலும் உண்டா? ஸ்திரீயே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. பின்னால் உள்ள உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. அது அற்புதமானது. நீங்கள் தவறென்று உங்களை உறுதியாய் நம்பப் பண்ணின அதே தேவன் உங்களை சரிப்படுத்த இங்கிருக்கிறார். இப்பொழுது நாம் தலைகளை வணங்கின வண்ணமாய் ஜெபிப்போம். உங்கள் சொந்த வழியில் அவருடன் பேசுங்கள். ஆயக்காரன் தன் மார்பில் அடித்துக் கொண்டு, “தேவனே, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்'' என்று கூறினதை போன்று, உங்களால் அதைக் காட்டிலும் அதிகம் கூற முடியவில்லை என்றால், அதை மாத்திரம் அவன் கூற வேண்டியதாயிருந்தது. மீதியானதை தேவன் அறிந்திருந்தார். அவன் நீதிமானாய் வீடு திரும்பினான். இன்றிரவு நீங்களும் அவ்வாறே புயலிலிருந்து பாதுகாப்பு அடைந்து வீடு செல்வீர்கள். 68எங்கள் பரலோகப் பிதாவே, நான் கூற ஏவப்பட்ட இந்த விட்டுவிட்டுப் பேசப்பட்ட வார்த்தைகள் புறப்பட்டுச் சென்றன. சிறுவன் ஒருவன் மொழியின் முதலெழுத்துக்களை திரும்பத் திரும்ப உச்சரித்து, ''எல்லா எழுத்துக்கும் உமக்குத் தெரியும். அவைகளை நீர் ஒன்றாக கோர்த்துக் கொள்ளும் என்று ஜெபித்தது போல் நானும் ஜெபிக்கிறேன். அந்த சிறுவனின் இருதயத்தின் எளிமையை நீர் கண்டீர். தேவனே இன்றிரவு என் எளிய இருதயத்தையும் நீர் கீழே நோக்கிப் பார்த்து, என் இருதயத்தின் எளிமையை காண்பீராக. கர்த்தாவே, எனக்கும் ஆயிரக்கணக்கான மற்றவர்க்கும் நீர் அளித்த இளைப்பாறுதலை இந்த ஜனங்கள் கண்டுகொள்ள வேண்டுமென்றும், அவர்களுடைய ஆத்துமாவின் ஒரே இரட்சகராகிய இயேசுவை அவர்கள் கண்டடைய வேண்டுமென்றும், அவர் பிதாவினிடம் அவர்களை வழி நடத்தி, அவருடைய பிளக்கப்பட்ட விலாவில் அவர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அவர்கள் அவரை ஏற்றுக் கொண்டு நியாயத்தீர்ப்புக்கு நீங்கலாகி இருக்க வேண்டுமெனக் கருதி, இச்செய்தியானது அவர்களுக்கு அன்போடும் இனிமையோடும் அளிக்கப்பட்டது 69கர்த்தாவே, இன்றிரவு அநேகர் - ஆம், அநேகர் - தங்கள் கரங்களை உயர்த்தினர். ''விசுவாசியுங்கள்'' என்று சொல்வதைக் காட்டிலும் வேறென்ன அதிகமாக நான் அவர்களுக்கு கூறு முடியும்? அவர்கள் உத்தமாக விசுவாசிப்பார்களானால், இந்நேரத்தில் அவர்கள் நித்திய ஜீவனைப் பெறாமலிருப்பது கூடாத காரியம். ஏனெனில் என் வசனத்தைக் கேட்டு என்று நீர் உரைத்திருக்கிறீர். இந்த வார்த்தைகள் உம்முடையவைகள். ஒருக்கால் அவை சரியாக பொருத்தப்படாமல் உரைக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால் நீர் அவைகளை சரியாகப் பொருத்த வல்லவராயிருக்கிறீர். ஒருக்கால் கைகளை உயர்த்தினவர்களுக்கு நீர் அவ்விதம் செய்திருக்கக் கூடும். ஏனெனில் நீர், ''நான் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளாமல், அவனுக்கு நித்திய ஜீவனை அளித்து, அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்“ என்று உரைத்திருக்கிறீர். கர்த்தராகிய தேவனே, அது நீர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்கள் கரங்களை உயர்த்தினர். அவர்களுக்கு நீர் தேவை. இப்பொழுதும் பிதாவே அவர்களுடைய இருதயத்தை நன்மையினாலும் இரக்கத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும்நிரப்புவீராக! இது அவர்களுக்கு மறக்க முடியாத இரவாக அமைந்திருப்பதாக. ஏனெனில் இந்த இரவில் தான் அவர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டனர். 70நமது தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில், தேவன் என் ஜெபத்தைக் கேட்கிறார் என்னும் நம்பிக்கை உங்களுக்கு இருந்து, உங்கள் மேல் நான் கைகளை வைத்து உங்களோடு நான் ஜெபிக்க வேண்டுமென்று விரும்பினால், நீங்கள்... எல்லோரும் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில், இசை மிருதுவாக இசைக்கப்படும் போது, இந்த மகத்தான இரட்சிப்பின் செய்தியை ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியைப் பெற விரும்புவோர் திரளாக முன்னால் வந்து, “சகோ. பிரன்ஹாமே, என்னிடம் இனிமையாயிருந்து, அமைதியற்ற இக்காலத்தில் எனக்கு சமாதானத்தை அளிக்க விரும்புகிறேன்” என்று கூறுங்கள். அசைக்கப்படக் கூடிய எல்லாமே அசைக்கப்படும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நாமோ அசையாத ராஜ்யத்தைப் பெறுவோம். அது கிறிஸ்து. 71நீங்கள் முன்னால் வந்து என்னுடன் பீடத்தண்டையில் நிற்பீர்களா? உங்கள் கையைப் பிடித்து உங்களுடன் ஜெபிக்க விரும்புகிறேன். நீங்கள் வரவிரும்பினால், நாம் மெதுவாக பாடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் எழுந்து முன்னால் வாருங்கள். கைகளை உயர்த்தினவர்கள் இங்கு வந்து பீடத் தண்டையில் நில்லுங்கள். “வீட்டுக்கு வருகிறேன்” என்னும் இந்த சரணத்தை இப்பொழுது பாடும் போது, உங்களுக்கு விருப்பமானால், வாருங்கள் (சபையோர் ''கர்த்தாவே, நான் வீட்டுக்கு வருகிறேன்“ என்னும் பாடலை தொடர்ந்து பாடுகின்றனர் - ஆசி) இதை நீங்கள் கேட்பது இதுவே கடைசி முறையாயிருக்குமானால் அதை யோசித்து பாருங்கள் ஒருக்கால் இது கடைசி முறையாயிருக்குமானால் சற்று கழிந்து தெருவில் சங்கு (Siren) தொனித்து, அது நீங்களாயிருந்து உங்கள் பிரேதத்தைக் கொண்டு செல்ல அவர்கள் வந்தால் விடியற்காலை இரண்டு மணியளவில் உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நீங்கள் மருத்துவரை அழைக்க நேர்ந்தால் நீங்கள் சுயாதீனராயிருக்கிறீர்கள். நான் கூறுவது உங்களுக்கு தொனிக்காதா? பாதுகாப்பிற்குள் வாருங்கள், வரமாட்டீர்களா? ஏனெனில் கடைசி நாட்களில் நீங்கள் நியாயத்தீர்ப்பில் நிற்கவேண்டும். நான் வீட்டுக்கு வருகிறேன். வீட்டுக்கு வருகிறேன், வீட்டுக்கு வருகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக (சபையோர் ''கர்த்தாவே, நான் வீட்டுக்கு வருகிறேன்“ என்று தொடர்ந்து பாடுகின்றனர். அப்பொழுது சகோ. பிரன்ஹாம் பீடத்தண்டையில் நின்று கொண்டிருக்கும் ஜனங்களுக்கு ஜெபிக்கிறார் -ஆசி). 72நீங்கள் எழுந்து வந்து, பீடத்தண்டையில் நிற்பவர்களுடன் சேர்ந்து கொள்ளமாட்டீர்களா? வாருங்கள். இப்பொழுது நியாயத்தீர்ப்புக்கு வருவதாகும் வாருங்கள், உங்கள் பாவங்களை இப்பொழுது அறிக்கையிடுங்கள். அப்படி செய்தால், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு செல்ல வேண்டிய அவசியமிராது. இப்பொழுது வந்த இந்த தம்பதிகளை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. இளம் பெண்ணே , தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது, இளம் பெண்ணே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்கு வாருங்கள், வாருங்கள் ஐயா. நான் வெகு தூரம் அலைந்தேன்... (என் ஸ்பானிய சகோதரனே, வாருங்கள்)... தேவனை விட்டு இப்பொழுது நான் வருகிறேன்... நீங்கள் இப்பொழுது எழுந்து இங்கு வரமாட்டீர்களா? நாம் ஜெபம் செய்வோம். ஒதுங்கும் இடத்துக்கு வாருங்கள். ...பாவத்தில் நீண்ட காலம் நடந்தேன் ஓ, கர்த்தாவே, நான் வீட்டுக்கு வருகிறேன். ஆர்கன் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இதை நான் கூறலாமா இன்றிரவு அளிக்கப்பட்ட செய்தியானது அன்பின் செய்தி, கிருபையின் செய்தி எச்சரிப்பின் செய்தி. நாளை இரவு இந்த செய்தி உங்கள் செவிகளில் வேறெங்காகிலும் இருந்து, உங்களை ஆக்கினைத் தீர்ப்புக்கும், நியாயத்தீர்ப்புக்கும் உட்படுத்தும் செய்தியாக அமைய வழியுண்டு. அதில் கிருபை உள்ள பொழுதே, வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். நண்பனே, அப்படி செய்யமாட்டாயா? இன்றிரவு நான் என்ன கூறினேனோ, அதனுடன் என்றாவது ஒரு நாளில் உங்களை நான் சந்திக்க வேண்டும். வரமாட்டீர்களா? அது உங்கள் சார்பில் இரக்கத்துக்காக கெஞ்சட்டும். நாம் இன்னும் ஒருமுறை, “இப்பொழுது நான் வீட்டுக்கு வருகிறேன்'' என்னும் பாடலைப் பாடும் போது அப்படி செய்ய மாட்டீர்களா? 73அருமை சகோதரியே, இங்கே நில்லுங்கள். உங்களுக்கு விருப்பமானால், நீங்கள் அனைவரும் சிறிது நேரம் இங்கே நில்லுங்கள். பீடத்தண்டையில் நின்று கொண்டிருப்பவர்களுக்காக நாங்கள் ஜெபிக்க விரும்புகிறோம். அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கட்டும். இன்னும் ஒரு முறை. நான் வெகு தூரம் அலைந்தேன்....(எழுந்து வாருங்கள், வரமாட்டீர்களா - உங்களை நான் அழைக்கிறேன்) இப்பொழுது நான் வீட்டுக்கு வருகிறேன். பாவத்தின் பாதைகளில் நீண்ட காலம் நடந்தேன் கர்த்தாவே, நான் வீட்டுக்கு வருகிறேன். கிறிஸ்தவர்களே, இப்பொழுது ஜெபித்துக் கொண்டிருங்கள். வீட்டுக்கு வருகிறேன். பாவியான என் சகோதரனே, வா. சகோதரியே வா; அவருடைய இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவர்களே, உங்களுக்காக கிறிஸ்து மரித்தார். இப்பொழுது நீங்கள் வரமாட்டீர்களா? இந்த மகத்தான நேரத்தில், நியாயத்தீர்ப்பு தேசத்தின் வாசல்களில் -உலகத்தின் வாசல்களில் - தொங்கிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் உங்களை வருந்தி அழைக்கிறேன். நீங்கள் வரமாட்டீர்களா? கிறிஸ்துவின் சார்பில் உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். வர நேரமிருக்கும் போதே கிறிஸ்துவினிடம் வாருங்கள். இது இரக்கமாயிருக்கட்டும், நியாயத்தீர்ப்பாக அல்ல. 74இப்பாடலை மெளனமாக இசைப்போம் (சகோ. பிரன்ஹாம், ''கர்த்தாவே, நான் வீட்டுக்கு வருகிறேன்'' என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார் -ஆசி). நான் சிறிது நேரம் காத்திருக்கும் போது, வர வேண்டுவோர் இன்னும் யாராகிலும் உண்டா? வெவ்வேறு மக்கள் இங்கு வந்து தங்கள் இடங்களில் நிற்கின்றனர். இது இனிமையான நேரம் அல்லவா? எனக்குத் தெரியவில்லை, ஒருக்கால் எனக்கு மாத்திரம் அப்படி இருக்கக் கூடும். இப்பொழுது எனக்கு நல்லுணர்வு தோன்றுகிறது. இதைதான் நான் விரும்கிறேன், இதுவே எனக்குப் பிரியம். நான் வாலிபப் பிரசங்கியாக இருந்த போது, ஒரு முறை ஒரு போதகரின் சகோதரி என்னை அவளுடன் நடனத்துக்குச் செல்லும்படி அழைத்தாள். நான் நடனத்துக்குச் செல்லும் வழக்கமில்லை என்று அவளிடம் கூறினேன். அவள் சினிமாவுக்கு அழைத்துச் செல்லும்படி கூறினாள். நான் மறுத்தேன். “நான் சினிமாக் காட்சிகளுக்கு செல்வதில்லை'' என்றேன். “அப்படியானால் உங்களுக்கு இன்பம் எங்கு கிடைக்கிறது?'' என்று கேட்டாள். “என்னுடன் கூட்டத்துக்கு வா” என்றேன். 75அன்றிரவு நான் கூடாரக் கூட்டம் ஒன்று நடத்தினேன். அப்பொழுது நான் ஏறக்குறைய இருபத்தொன்று வயதான இளைஞன். அன்றிரவு அநேகர் பீடத்தண்டை வந்தனர். இவள் பின்னால் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருப்பதைக் கண்டேன். நான் அவளிடம் சைகை காட்டி கூப்பிட்டேன். “நேற்றிரவு என்னை ஒரு கேள்வி கேட்டாயே, அதற்கு இன்றிரவு நான் பதிலளிக்கமுடியும்'' என்றேன். அவள், “பில்லி, அது என்ன?” என்றாள். நான், “இதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான நேரம்” என்றேன். பாவிகள் வருவதைக் காணும்போது, திருப்தியான ஏதோ ஒன்று என் இருதயத்தில் சமாதானத்தைக் கூறுகிறது. வீட்டுக்கு வருகிறேன். நான் வீட்டுக்கு வருகிறேன்..... இந்த இனிமை எனக்கு மிகவும் பிரியம். பரிசுத்த ஆவியானவர் இங்கு பிரசன்னராய் திருப்தியடைந்தவராய், ''நன்றாக செய்தாய், நன்றாக செய்தாய்'' என்று கூறுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. இது ஆயத்தம், சுகமளிக்கும் ஆராதனை, முதலாவதாக ஆவிக்குரிய சுகம்பெறுதல். “கிறிஸ்துவின் சரீரம் வியாதிப்பட்டுள்ளது. அந்த ஆவிக்குரிய சரீரத்துக்கு சுகம் தேவை. நான் வீட்டுக்கு வருகிறேன். இப்பொழுது உங்கள் தலைகளை வணங்குங்கள். ஒவ்வொவரும் ஜெபத்தில் தரித்திருங்கள். வீடு, ஓ, இனி ஒருபோதும் அலையாதபடிக்கு, (சகோ. பிரன்ஹாம் பீடத்தண்டை நிற்பவர்களிடம் பேசுகிறார் - ஆசி). தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.